நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் பாதீனிச் செடி அகற்றும் செயற்றிட்டம்
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில் காணப்படுகின்ற பாதீனிச் செடிகளினை வேரோடு அகற்றுகின்ற பணியினை நல்லூர் பிரதேச சபை நேற்று(11) முதல் முன்னெடுத்து வருகின்றது.
குறித்த செயற்றிட்டத்தினை வினைத்திறனாக தொடந்து முன்னெடுக்கும் வகையில் ஒரு பிரத்தியேக அணி உருவாக்கப்பட்டு அவர்கள் வீதியோரங்களில் காணப்படுகின்ற பாதீனியச் செடிகளினை உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அழித்து வருகின்றார்கள்.
நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச் செயற்றிட்டம் தொடர்பில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் கருத்து தெரிவிக்கையில் வீதிகளில் காணப்படும் பாதீனிய செடிகளினை அழிக்கும் செயற்பாட்டினை எமது பணியாளர்கள் செய்து வருகின்றார்கள். இச் சம நேரத்தில் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் வாழ்கின்ற பொது மக்களும் தங்கள் குடியிருப்பு வளாகங்களில் காணப்படுகின்ற பாதீனிச் செடிகளை உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அழிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்குமாறும் அவ்வாறு பிடுங்கப்படுகின்ற பாதீனிச் செடிகளினை அகற்றவேண்டும் எனின் அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டால் அதற்குரிய ஏற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

