;
Athirady Tamil News

வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026

0
வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026′ (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் அமைச்சர்  இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, தென்னிந்தியாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர், பிரதமரின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை ஆகியவற்றின் தலைவர்கள், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.