குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் பெயரில் மோசடி ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் பெயரில், பொதுமக்களுக்கு வரும் போலியான மின்னஞ்சல் செய்திகள் குறித்து, பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Shani Abesekara. Director of the Criminal Investigation Department (CID), Colombo 07, Sri Lanka, NationWide Could, Protection 24/7 எனும் மின்னஞ்சல் முகவரியினூடாக, தனிநபர் அல்லது குழுவொன்றால் அண்மைக்காலங்களில் குருஞ்செய்திகள் வருவதனை அவதானிக்கமுடிகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இவ்வாறான மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டவை அல்ல என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
[email protected] [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட மேற்கண்ட போலி email செய்திகள், பொதுமக்களை ஏமாற்றுதல், பண மோசடி அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பெறுதல் என்ற மோசடி நடவடிக்கைகளுக்கான அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த மின்னஞ்சலை அனுப்பிய நபர்கள் அல்லது குழுக்கள் பற்றிய தகவல்களைக் கண்டறியவும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எனவே, குறித்த மின்னஞ்சல் முகவரிகளினூடாக வரும் செய்திகளின் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.