சி.ஐ.டியில் ஆஜராக முடியாது; மைத்ரி விக்ரமசிங்க
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக் குறைவால், இன்றைய தினம் குறித்த பிரிவில் முன்னிலையாக முடியவில்லை என கடிதம் மூலம் அவர் அறியப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டிலேயே சிகிச்சை
வீட்டிலேயே சிகிச்சை பெறுமாறும் வாக்குமூலத்தை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கு தனிப்பட்ட பயணத்திற்காக 1.66 பில்லியன் ரூபாய்க்கு மேல் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்போவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு ஏலவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.