;
Athirady Tamil News

Oxygen தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி…கல்முனை பிராந்தியத்துக்கான Oxygen Plant அமைக்க நடவடிக்கை

0

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த Oxygen தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வை எட்டும் வகையில், புதிய Oxygen உற்பத்தி நிலையம் (Oxygen Plant) ஒன்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்குத் தேவையான Oxygen Cylinder அநுராதபுரம் மற்றும் மகாஓயா போன்ற தொலைதூரப் பிரதேசங்களிலிருந்தே கொண்டு வரப்படுகின்றன. இதனால் போக்குவரத்து மற்றும் கொள்வனவுக்காக பெருமளவிலான அரச நிதி செலவிடப்படுவதுடன், அவசரத் தேவைகளின் போது தூர இடங்களிலிருந்து Oxygen Cylinder களை பெற்றுக்கொள்வதில் காலதாமதங்களும், நடைமுறைச் சிக்கல்களும் ஏற்படுகின்றன.
இந்த சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, கல்முனையில் புதிதாக Oxygen Plant ஒன்றினை நிர்மாணிப்பதற்காக PSDG திட்டத்தின் கீழ் சுமார் 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்குரிய, பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்வதற்கான கள ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் (24) களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அங்குள்ள Oxygen Plant யினை பார்வையிட்டதுடன், அதன் செயல்முறை, பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இந்தத் திட்டம் பூர்த்தியடையும் பட்சத்தில், கல்முனை பிராந்திய வைத்தியசாலைகள் Oxygen தேவையில் தன்னிறைவு பெறுவதுடன், நோயாளர் பராமரிப்பு சேவையில் இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.