;
Athirady Tamil News

மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்… மக்கள் அச்சம்

0

நேபிடா,

மியான்மரில் நேற்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 6.40 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் 100 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 22.977 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.305 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து காலை 8.13 மணியளவில் ரிக்டரில் 3.5 அளவில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.