;
Athirady Tamil News

எல்லை மீறும் பயங்கரவாதம்: ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

0

தங்கள் நாட்டுக்கு எதிரான பயங்கரவாத செயல்கள் எல்லை மீறிச் செல்வதாக ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி மீண்டும் அமைந்ததில் இருந்து அந்த நாட்டுடான பாகிஸ்தான் எல்லையில் பிரச்னை அதிகரித்துள்ளது. இது தவிர தலிபான் பாகிஸ்தான், ஐஎஸ் (கொரேசான்) ஆகிய பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி வந்தன. அவா்களை தலிபான்கள் ஆதரித்து வருவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இதற்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அமைப்பினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினா்.

ஒரு சில மாதங்கள் தீவிரமாக நடைபெற்ற இந்த மோதலில் இரு தரப்பிலுமே ராணுவ வீரா்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது மோதலின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆப்கானிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் எல்லை மீறிச் செல்கிறது. எனவே, இது போன்ற எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு செயலற்று இருக்கும் நிலையில், அவா்களின் தவறுக்காக பாகிஸ்தான் மக்களின் உயிரை பயங்கரவாதத்துக்கு காவு கொடுக்க முடியாது. ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி தங்கள் மண்ணில் உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒடுக்க தலிபான்கள் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.