சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!!

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 80 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குப்புற கவிழ்த்து விடப்பட்ட பஸ்
அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பயணித்த, தனியார் பஸ்ஸொன்று, மஹரகம நகரில் வைத்து, அரசாங்கத்துக்கு எதிரானவர்களால், தாக்கப்பட்டு கவிழ்க்கப்பட்டுள்ளது.