;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றும் இளவரசி கேட்டின் புற்றுநோய் வீடியோ!

இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் கண்டறிதல் குறித்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் (Kate Middleton) சமீபத்தில் தனது புற்றுநோய் குறித்து…

இரவுநேர கேளிக்கை விடுதிக்குள் புகுந்த ஆயுததாரி: நெதர்லாந்தில் சம்பவம்

நெதர்லாந்தில் இரவுநேர கேளிக்கை விடுதியொன்றினுள் ஆயுதமேந்திய நபர் ஒருவர் புகுந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது, நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரமான ஈடியில் உள்ள கேளிக்கை…

மொஸ்கோ பயங்கரம்: வெளிநாட்டு உதவியை நாடும் பிரான்ஸ்

பாரீஸில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் தனது நட்பு நாடுகளில் இருந்து காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பை உறுதி…

உள்ளூர் முட்டை விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக கொண்டு வரப்படவுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு…

தமிழர் பகுதியில் சினிமா பாணியில் இடம்பெற்ற சம்பவம்… இளைஞர்களின் துணிகரச் செயல்!

யாழ்ப்பாண பகுதியொன்றில் பெண்ணின் தங்க நகையை பறித்து சென்ற கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடித்த இளைஞர்களின் துணிகரச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ். முகமாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு வழிபாட்டுக்கு சென்ற பெண்ணின் தங்க…

ஐநா பார்வையாளர்கள் மீது இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்

ஐநா பார்வையாளர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தெற்கு லெபனானில் நேற்று நடைபெற்றுள்ளது. பலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல்…

கொழும்பு அரசியலில் பரபரப்பு… மஹிந்தவுடன் இணையும் சஜித் கட்சியின் முக்கிய உறுப்பினர்!

இலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றிற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதற்கு தயாராகவுள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா…

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம்… சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

யாழ். சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குடும்பஸ்தரின் சடலம் இன்றையதினம் (31-03-2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மடகாஸ்கார் தீவில் காலநிலை மாற்றத்தினால் பலியான உயிர்கள்

ஆப்பிரிக்க கண்டத்தின் மடகாஸ்கர் தீவிலுள்ள கமனே பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப் பகுதியில் பலத்த புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதன்போது, மணிக்கு சுமார் 150 கிலோ…

சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகன்ற ஏழு பேர் கைது…!

ஹட்டன் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகன்ற ஏழு பேர் ஹட்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக ஹட்டன்…

புலம்பெயர்தல் பின்னணி குறித்து வெளிப்படையாக பேசிய பிரித்தானிய பிரதமர்

என்ன காரணமோ தெரியவில்லை, திடீரென பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு தான் இந்திய வம்சாவளியினர் என்னும் ஞாபகம் வந்திருக்கிறது. சமீபத்தில் பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி, தனது புலம்பெயர்தல் பின்னணி…

சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு… பொலிஸார் துப்பாக்கிச்சூட்டில் நபருக்கு நேர்ந்த நிலை!

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சேவைத் துப்பாக்கி தவறுதலாக சுடப்பட்டதில் 28 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸாருக்கு…

டொலருக்கு நிகராக வலுப்பெறும் ரூபா: மாற்றமின்றி தொடரும் கட்டுமான பொருட்களின் விலை

இலங்கையில் கட்டுமான பொருட்களின் விலை இன்னும் குறைக்கப்படவில்லை என நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கு நிகராக பல கட்டுமான பொருட்களின் விலைகள் அவ்வப்போது உயர்ந்துள்ளன. தற்போது டொலருக்கு…

சுற்றுலாப் பயணிகளால் கடலில் விடப்பட்ட 172 ஆமைக் குஞ்சுகள்

கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் பராமரிக்கப்பட்டு வந்த ஆமைக் குஞ்சுகள் நேற்று(30) இரவு சுற்றுலாப் பயணிகளினால் கடலில் விடப்பட்டுள்ளன. கண்டகுழி கடற்கரையில் இடப்படும் முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து…

பிரித்தானிய வீரர்கள் மீசை மற்றும் தாடி வளர்க்க அனுமதி

பிரித்தானியாவின் இராணுவ வீரர்கள் மீசை மற்றும் தாடி வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விவாதத்தின் விளைவாக, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரித்தானிய இராணுவ…

பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு கல்முனையில் ஆசந்தி பேரணி நிகழ்வு

கிறிஸ்தவ மக்களால் உலகளாவிய ரீதியில் பெரிய வெள்ளி தினம்(29) அனுஷ்டிக்ப்படுகிறது.இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவையில் அறையைப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.…

இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது

video link-https://wetransfer.com/downloads/5c9912a2cd1a7d7fada0a0b8437ff5e220240330041054/b94976?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில்…

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

video-https://wetransfer.com/downloads/783f2dfcfd824501f6654d00e8769c3e20240331061501/94756a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த…

எங்கும் ஹிந்தி என்பதே மோடி அரசின் சாதனை:முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம்

‘எங்கும் ஹிந்தி, எதிலும் ஹிந்தி’ என்பதே பிரதமா் மோடி அரசின் சாதனை என்றும், வாக்குறுதிகள் எதையும் அவரது அரசு நிறைவேற்றவில்லை என்றும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா். அவா் சமூகவலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட…

நிகழவிருக்கும் முழு சூரியகிரகணம்: கனடா மக்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி முழு சூரியகிரகணம் தோன்றவிருக்கும் நிலையில் கனடாவின் ஒரு பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவில் 1979ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில், முழு…

ஒரே நாளில் 99 ‘டிரோன்’ தாக்குதல்; உக்ரைனில் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும்…

ரஷியா உக்ரைன் மீது 99 ‘டிரோன்’ தாக்குதல்களை நடத்திய நிலையில் உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்டுள்ளது. ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும்…

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த திருமதி.நவமணி அவர்களின் நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்..…

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த திருமதி.நவமணி அவர்களின் நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) ############################################ கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர்…

டெபாசிட் இழந்த வேட்பாளா்கள்

தோ்தல் டெபாசிட் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 34 (1ஏ), 1951இன்படி, ஒரு வேட்பாளா் தோ்தலில் போட்டியிட குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வது கட்டாயம். தீவிரம் காட்டாத, ‘வாய்ப்பு குறைவான’ வேட்பாளா்களை வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தடுப்பதே…

சகோதரனை கொடூரமாக கொலை செய்த இளைய சகோதரன்! இலங்கையில் பகீர் சம்பவம்

கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல - குடாகம பகுதியில் மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைய சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு (30-03-2024) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.…

விபச்சார பெண்களுக்கு மரண தண்டனை! தலிபான்களின் அதிரடி அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றவுள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம்…

வீதிப் பாதுகாப்புக்கு விசேட செயற்றிட்டம்

வடமாகாணத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டையும் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர் - என வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார்.…

உக்ரைனில் ரஷ்யா விரைவில் குறிவைக்கப்போகும் முக்கிய இடம் : புடினின் அறிவிப்பால் கலக்கம்

உக்ரைனுக்கு எப்.16 ஜெட் விமானங்கள் வந்தவுடன் அவற்றுக்கு இடமளிக்கக் கூடிய சில பகுதிகளை ரஷ்யா குறிவைக்கும் என அதிபர் புடின் தெரிவித்துள்ளமை பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புடின் இராணுவ…

ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் இந்தியாவின் ஏவுகணை : வெற்றிகரமாக நிகழ்ந்தது…

வெற்றிகரமான சோதனைக்கு பின் இந்திய ராணுவத்தில் 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணை இணைக்கப்பட்டுள்ளது, இந்திய ராணுவத்தின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த ஏவுகணை ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று (30) 'ரைசிங் சன்' பிரமோஸ்…

ஆடை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களின் இறக்குமதிக்காக 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

தற்போதைய விலை சூத்திரத்தின் கீழ், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார நிலவரப்படி நாட்டில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக…

நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இன்று(31.03.2024) நடைபெறவுள்ள உயிர்த ஞாயிறு ஆராதனைகளை கருத்தில்கொண்டே இந்த பாதுகாப்பு நடவடிக்கை…

அஸ்வெசும வேலைத்திட்டத்தினால் முடக்கப்பட்டுள்ள சமுர்த்தி திட்டம்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அஸ்வெசும வேலைத்திட்டத்தினால் முழு சமுர்த்தி திட்டமும் முடக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்…