;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

காட்டிக்கொடுத்த இஷாரா; கிளிநொச்சியில் சிக்கிய ஆட்கடத்தல்காரர்!

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் கிளிநொச்சியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி…

கொழும்பிலிருந்து பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்து; பயணிகள் நிலை என்ன?

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை…

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்கு அருகே நிலநடுக்கம்

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்கு அருகே சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.1 அளவிலான இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.30 மணியளவில் சிட்னி நகரின் வடக்கே சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 16…

சீரற்ற வானிலை காரணமாக நேர்ந்த விபரீதம்; கால்வாயில் கவிழ்ந்த கார்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பாணந்துறை - கர்மாந்தபுர வீதியில் கார் ஒன்று வழுக்கிச் சென்று கெரபன் கால்வாயில் கவிழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் காரில் இரண்டு பேர் பயணம் செய்துள்ள போதும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.…

யாழில் பிறந்து 25 நாளேயான சிசு உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், மூளையில் கிருமித் தொற்று ஏற்பட்டு பிறந்து 25 நாளேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் சிசு பிறந்த நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதால் யாழ்.…

அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானி வெளியீடு

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை அறிவிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை இதனை வெளியிட்டுள்ளது. அதன்படி, பச்சை அரிசியின் அதிகபட்ச…

66 வயதில் 10வது குழந்தை பெற்ற பாட்டி – மிரண்ட மருத்துவர்கள்!

66 வயதுப் பெண்மணி தனது 10வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 10வது குழந்தை ஜெர்மனியைச் சேர்ந்தவர் அலெக்சாண்ட்ரா ஹில்டபிராண்ட் (66). இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 10வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். மனித உரிமை ஆர்வலரான…

பிரான்ஸில் பெரும் அழிவை ஏற்படுத்திய சூறாவளி

பிரான்ஸின் பாரிஸ் (Paris) அருகே உள்ள வால்-து-வாஸ் (Val-d’Oise) மாவட்டத்தில் தாக்கிய பயங்கர சூறாவளி (Tornado) பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் கூறுகின்றன. இந்தச் சூறாவளியில் சிக்கி 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன்,…

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம் ; பரிதாபமாக பிரிந்த…

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று (21) உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, அவர் பாதுகாப்பற்ற மதகில் சிக்கிக் கொண்டதாக…

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு தடை ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து செவ்வாய்க்கிழமை (21) தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, மாநகர சபை ஆட்சி வவுனியா மாநகர சபையில்…

யாழில் நிகழ்ந்த அதிசயம்; மழையுடன் சேர்ந்து விழுந்த பொருட்களால் ஆச்சரியத்தில் மக்கள்

யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை…

யாழில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய யுவதியின் செயல் ; உறைய வைத்த பின்னணி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி பலி இது…

நவி மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு; 14 பேர்…

மும்பை: மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். நவி மும்பையின் வாஷி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்…

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸை அழித்துவிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால் ஹமாஸை அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயிலான போர் நிறுத்தம் கடந்த வாரம் அமலுக்கு வந்தது. எகிப்தில் அதிபர் டிரம்ப் தலைமையில்…

ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே தகைச்சி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (64) அந்நாட்டின் கீழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரெல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால்,…

புடின், ட்ரம்புடன் இணைய தயார்: ஆனால் சுவிட்சர்லாந்து அல்லது இங்குதான் – வோலோடிமிர்…

ஹங்கேரியில் நடைபெற இருக்கும் உச்ச மாநாட்டில் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சமாதான ஒப்பந்தம் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு மூன்று ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், போரை…

பாடசாலைக்குள் சிறுமியை குத்திக்கொன்ற ஆசிரியை ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தென்கொரியாவின் டிஜோன் நகரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மியோக் ஜெ வான் (வயது 48) என்பவர் ஆசிரியையாக செயல்பட்டு வந்தார். இதனிடையே, கடந்த பிப்ரவரி 10ம் தேதி பள்ளியில் படித்து வந்த கிம் ஹா நியுல் என்ற 8 வயது சிறுமியை…

மரணமடைந்த பெண் ஊழியரிடம் விடுப்புக் கடிதம் கேட்ட நிறுவனம்: கொந்தளிக்க வைத்துள்ள செயல்

தைவான் விமான நிறுவனம் ஒன்று, மரணமடைந்த தன் பெண் ஊழியர் ஒருவரிடம் விடுப்பு எடுத்ததற்கான ஆதாரம் கோரியுள்ள விடயம் இணையவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. மரணமடைந்த பெண் ஊழியர் Ms Sun (34) என்னும் இளம்பெண், தைவானின் EVA Airways விமான…

நாடு முழுவதிலும் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடு முழுவதிலும் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த…

“விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்” – ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்த பேக்கரி…

டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த கடைக்கு பல ஆண்டுகளாக காந்தி…

தமிழர் பகுதியில் பயங்கரம்; நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வந்தவருக்கு காத்திருந்த…

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 43 வயதான நபரே கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் திருகோணமலை…

அக்டோபர் 1 ஆம் திகதி முதல் 10 இலிருந்து 18 சதவீதமாக உயரும் வரி

2025 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், கெசினோ உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (21) தாக்கல்…

ட்ரம்பின் அணுசக்தி நெருக்கடியால் வரலாற்றில் முதல் முறையாக 1400 பேர்! மோசமான விளைவுகள் என…

அமெரிக்காவில் வரலாற்றில் முதல் முறையாக தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் 1,400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 1,400 ஊழியர்கள் பணிநீக்கம் அமெரிக்காவில் முதல் முறையாக நிதி பற்றாக்குறையால் NNSA பாதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி…

11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று (21) முதல் அடுத்த 24 மணிநேரத்துக்கு அமுலில்…

கடைக்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி; மயிரிழையில் தப்பிய பெண்

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் தொழில்நுட்ப சாதனக் கடையொன்றிற்குள் திடீரென முச்சக்கரவண்டி ஒன்று பாய்ந்து விபத்திற்குள்ளான நிலையில் பெண் ஒருவர் தெய்வாதீமனாக உயிர் தப்பியுள்ளார். வித்து ஏற்பட்ட கடையில் பெண்ணொருவர் பிறின்ட் எடுப்பதற்காக…

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டம் இனி யாருக்கு?

பிரித்தானிய மன்னரான சார்லசின் தம்பி இளவரசர் ஆண்ட்ரூ மோசமான சர்ச்சைகளில் சிக்கியதால் ஏற்பட்ட கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து தனது பட்டங்களைத் துறக்க முன்வந்துள்ளார். இந்நிலையில், அவர் வகித்த கோமகன் பட்டம் அடுத்து யாருக்கு என கேள்வி…

யாழில். தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும்…

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் உயர் பாதுகாப்பு…

பிரித்தானியர்கள் ராணுவத்தில் சேர மறுத்தால் என்ன ஆகும்?

உலக நாடுகள் பல, மூன்றாம் உலகப்போரை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றன. சுவிட்சர்லாந்து போன்ற நடுநிலை நாடுகள் முதல், உலகப்போர்களுக்காக வரலாற்றில் இடம்பிடித்த ஜேர்மனி போன்ற நாடுகள் வரை, தத்தம் ராணுவங்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக…

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம்

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் சாம்பசிவம் சுதர்சன் இன்றைய தினம் (21.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான இடமாற்ற விடுவிப்புக்…

யாழ். கோட்டையை சுற்றி எல்லைக்கற்களை நாட்ட தீர்மானம்

யாழ்ப்பாணம் கோட்டை வெளிப்புற பகுதியை சுற்றி தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோட்டையைச்…

ரூ. 75 ஆயிரம் கோடி! அமெரிக்கா – ஆஸ்திரேலியா இடையே கனிம ஒப்பந்தம்!

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசுகளுக்கு இடையில், ரூ. 75 ஆயிரம் கோடி மதிப்பிலான அரிய கனிம வள ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்தப்…

24 வயது பெண்ணை பணம் கொடுத்து திருமணம் செய்த 74 வயது தாத்தா – ஆனால்.. தப்பி ஓட்டம்!

74 வயதான முதியவர் ஒருவர், இளம் பெண்ணை பணம் கொடுத்து வாங்கி திருமணம் செய்துள்ளார். உனக்கு 24 எனக்கு 74 இந்தோனேசியா, கிழக்கு ஜாவாவின் பசிடன் ரீஜென்சியில், 74 வயதான முதியவர் தர்மன், 24 வயதான ஷெலா அரிக்கா என்ற பெண்ணை திருமணம் செய்ய சுமார்…

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு சமர்ப்பிப்பு

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்…

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்தது

கள்ளக்குறிச்சி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலையிலே எழுந்து, குளித்து, புத்தாடைகளை உடுத்தி, இனிப்பு மற்றும் பலகாரங்களை உண்டு, வாழ்த்துகளை பரிமாறி, தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன்…