;
Athirady Tamil News

மன்னாரில் காற்றாலைகள் செயற்றிட்டங்களால் அழியும் தருவாயில் சுற்றுலாத்துறை?!! (PHOTOS)

0

மன்னார் மாவட்டம் சுற்றுலாத்துறையினை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். பாரிய அளவிலான சுற்றுலாப்பிரதேசங்கள் காணப்பட்ட போதிலும் பேணுதல், அடையாளப்படுத்துதல், தொடர்ச்சியாக பராமரித்தல் போன்றவை அற்ற தன்மையில் உள்ளது. போரின் உச்சகட்ட பாதிப்பில் இருந்து இவ் மாவட்டம் வெளியேறிவரும் தருவாயில் மீண்டும் ஒர் பாரிய அனர்தங்களை எதிர்கொள்ளவேண்டிய தருவாயில் மீண்டும் மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது.

சுற்றுலாக்கடற்கரையினைக்கூட அடையாளப்படுத்தி மேம்படுத்துவதற்கு நிதிகளையும் தங்கள் ஆலோசனைகளை வழங்காத வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபுரமிருக்க, அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு மாவட்டத்தின் இயற்கை வள அழிவிற்கு கொண்டு செல்வதாகவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலகர் பிரிவில் அதிகளவான சுற்றுலாவிடுதிகள், பறவைகள் பார்வையிடும் இடங்கள், கண்டல் காடுகள், காணப்படுகின்றமையும் மிக முக்கிய சுற்றுலாப்பிரதேசமாக ஆதாம் பாலம் என்றும் கடல் தீடைகள் கொண்ட பிரதேசம் கடலுக்கு அடியிலுள்ள கடல் தாவரங்கள், அழகிய பாறைகள் போன்றவைகள் காணப்பட்டும் குறித்த சுற்றுலாத்துறையினை விருத்தி செய்ய முடியாமையானது மாவட்டத்தின் பின்னடைவாகவே பார்க்க வேண்டும்.

தற்பொமுது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலாக் கடற்கரையினையும் அழிக்கும் செயற்பாட்டில் காற்றாலை செயற்றிட்டங்கள் நடைபெறுமாயின் மன்னார் சுற்றுலாத்துறை வருமானத்தினையும் மக்கள் அன்றாட வாழ்வாதாரமான கரைவலை போன்ற மீன்பிடி செயற்பாடுகளில் பெறுகின்ற வருமானம் அற்றுப் போகும் தன்மையும் உயர்வாகக் காணப்படுவதால் இதுதொடர்பாக உயர் மட்ட தீர்மானங்கள் ஊடாக கரையோர கடற்கரையினை பாதுகாப்பதற்கு அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வருதல் வேண்டும் என மக்கள் கோருகின்றனர். மன்னார் சவுத்பார் தொடக்கம் கீரி, தலைமன்னார் வரையிலான கடற்கரையினை சுற்றுலாப்பிரதேசமாக மேம்படுத்த நகரசபை உறுப்பினர்களும் கவனம் செலுத்துதல் வேண்டும் என கூறும் மக்கள் மீன்பிடி பிரதேசங்களையும் பாதுகாப்பதற்கும் அதிகாரிகள் முன்வரவேண்டும் எனவும் கூறுகின்றனர்.

குறிப்பாக மன்னார் சுற்றுலாத்துறையானது மன்னார் மக்களின் அர்ப்பணிப்புடன் மேம்படுத்தப்பட்டதுடன்; தொடர்ந்தும் மன்னார் மாவட்ட சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபைகள், நகர சபைகள், மாவட்ட செயலகம், மாகாண சுற்றுலாப் பணியகம் தொடர்சியான பங்களிப்பு அவசியமாகவுள்ளதாக சமூதாய சுற்றுலாத்துறையினர் மற்றும் கரையோர மீன்பிடித் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.


‘காற்றாலைகளை பார்வையிட சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்பது ஒரு பிழையான அல்லது தவறான கருத்தே’ நிலையான அபிவிருத்திக்கு பங்களிப்போ, வருமாணம் மற்றும் நுகர்வு செயன்முறையினை மேம்படுத்த பங்களிக்காது. சுற்றுலாப்பயணிகள் இயற்கையினை ரசிக்கவே வருகின்றனர் அவர்கள் காற்றாலைகளுக்கும் தொலைத்தொடர்பு ரவர் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.