மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
4.2 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த சாட்சியங்களை பரிசீலித்த பின்னர் குறித்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.