றம்புக்கணை சம்பவம் தொடர்பில் IRICDP நிறுவுனர் அறிக்கை!!

றம்புக்கணையில் இன்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் IRICDP நிறுவுனர் உ.துஷ்யந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரம்புக்கன பிரதேசத்தில் இருந்து வெளியாகும் பயங்கரமான செய்தியால் தாம் மிகுந்த மனவேதனை அடைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் தங்கள் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
அனைத்து வகையான வன்முறைகளையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும், மேலும் கட்டுப்பாட்டையும் அமைதியையும் கடைப்பிடிக்குமாறு அனைவருக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”