நிட்டம்புவை சூடு: சிலர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்!!

நிட்டம்புவை பகுதியில் நிலவிய பதற்ற நிலையையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மொரட்டுவை மேயரின் வீட்டில் தீ
அரசாங்க ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மொரட்டுவை மேயரின் வீடு கடுமையாக தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.