புதிய நிதியமைச்சர் பந்துல?

புதிய நிதியமைச்சராக அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இவர் புதிய நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
நேற்றைய தினம் (4) நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி, இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையிலேயே முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.