துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் !!

காலிமுகத்திடலில் தற்போது அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பலத்த இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தடுக்க தவறியதாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் குற்றம்சுமத்தி வருகிறார்கள்.
கொழும்பின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்
கொழும்பின் 3 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.