யாழில் மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மீது மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும்…
இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. ஆணையாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) இலங்கைக்கு வந்தடைந்தார்.
ஐ.நா. ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) ஜூன் 26 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…
பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி
பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கத்தரினாவில் 21 பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹாட் ஏர் பலூன் சனிக்கிழமை அதிகாலை திடீரென…
ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவில் வீதிகளில் மக்கள் போராட்டம்
ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டடம் நடத்து வருகின்றனர்.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதிய இஸ்ரேல், ஈரான் மீது…
சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளராக பொன்னையா குகதாசன் திருவுளச்சீட்டு மூலம் தேர்வு
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு…
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா: முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த அரசாங்க…
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா - முன்னாயத்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அரசாங்க அதிபர் நேரில் ஆராய்வு
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான…
காஸாவிலிருந்து 3 பிணைக் கைதிகளின் சடலம் மீட்பு: இஸ்ரேல் ராணுவம்
டெல் அவிவ்: காஸாவில் இருந்து 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 4 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்தனா்.
தற்போது இஸ்ரேல்- காஸாவின் ஹமாஸ்…
கிளிநொச்சி வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு!
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக…
முன்பே வெளியேறிவிட்டோம்: அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரான்!
அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு முன்னரே நாங்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே 8 நாள்களுக்கு மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் (ஜூன்…
பதவியா வைத்தியசாலையில் மகன் மாயம்: 16 வருடங்களாக நீளும் தாயின் போராட்டம்
பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
செம்மணி பகுதியில் இன்றைய…
சர்வதேச நீதி கேட்டு சகலரும் வீதிக்கு இறங்குவோம் – தவிசாளர் நிரோஸ்
ஐ.நா. மனித உரிமைச் செயலாளர் நாட்டிற்கு வரும் நிலையில் எமது இனத்திற்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதி ஒன்றே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்ற உண்மையினை வெளிப்படுத்தி நாம் வீதிக்கு இறங்கவேண்டும் என வலிகாமம்…
ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் தெளிவாக பதிலளிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் அமெரிக்க நாடாளுமன்ற மேலவைத் தலைவா்…
பல நாடுகள் ஈரானுக்கு அணுகுண்டுகளை வழங்க தயாராக உள்ளன – ரஷ்யாவின் எச்சரிக்கை
பல நாடுகள் ஈரானுக்கு அணுகுண்டுகளை வழங்க தயாராக உள்ளதாக்க ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா ஈரானின் மூன்று முக்கிய அணுஆயுத திட்டங்களை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின்னர், ஈரானின் வெளிவிவகார அமைச்சர்…
இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக…
ஈரான் – இஸ்ரேல் போர் ;திடீரென உயர்ந்த மசகு எண்ணெய் விலை ; இலங்கை வெளியிட்ட தகவல்
தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான்…
மயிரிழையில் உயிர் தப்பிய சாரதியும் பயணிகளும்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா நகரில் முச்சகரவண்டி ஒன்று இன்று (23)விபத்துக்குள்ளாகியுள்ளது.
நானுஓயாவில் இருந்து நானுஓயா பாடசாலைக்கு இரு மாணவர்களை அழைத்து சென்ற போது முன்னாள் சென்ற பாரவூர்தியை முந்தி செல்ல முயன்றது. இதன் போது…
அமெரிக்காவுக்கு பதிலடி! இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் மீது…
பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்ததில் 7 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள்.
ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் ஷாஹி பாக் பகுதியில் 10 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7…
கூடுதல் விடுமுறைக்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்த நபர்
விடுமுறைக்காக மனைவியை 4 முறை திருமணம் செய்த நபரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
4 முறை திருமணம்
தைவானில் வங்கி ஊழியர் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் 6, 2020 அன்று முதல் திருமணம் நடைபெற்றுள்ளது.
தைவானில் தொழிலாளர் உரிமை சட்டப்படி,…
யாழில் கிணற்றில் பெண்ணின் சடலம்; தவிக்கும் பிள்ளைகள்
யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வசாவிளான் – சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண்ணின் சடலமே…
எரிபொருளை பதுக்கி வைக்கவேண்டாம்
எரிபொருள் தட்டுபாடு ஏற்படலாம் என பொதுமக்கள் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும்…
யாழ்ப்பாணம் செம்மணியில் ஏற்றப்பட்டது ‘அணையா தீபம்’
யாழ்ப்பாணம் செம்மணியில் ‘அணையா தீபம்’ போராட்டம் இன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது…
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: வான்வெளியை மூடிய இஸ்ரேல்!
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 21)…
பாடசாலை மாணவர்களுக்கு கல்விசார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்
சமூகப் பொருளாதார சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்விசார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் வேலணை பிரதேச செயலாளர் கே. சிவகரன் தலைமையில் 22.06.2025 ஆம் திகதி வேலணைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் விளைவு! சர்வதேச கப்பல்களைத் தாக்கும் ஹவுதி!
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யேமன் நாட்டில் உள்ள (ஈரான் ஆதரவு பெற்ற) ஹவுதி அமைப்பானது, இஸ்ரேலுடனான போரில்…
சூரியசக்தி கட்டமைப்பின் மின் அலகுக்கான கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் மின் அலகுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒரு அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 27 ரூபாவிலிருந்து 45.80 ரூபா…
தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; தாய் கண் முன்னே பலியான 15 வயது மகள்
கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் பலி ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று, இன்று (23) அதிகாலை இரண்டாவது மைல் கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்தின்…
தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த லாரி: தப்பிய கார்!
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் டயர் வெடித்து லாரி தீப்படித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஆரணி வழியாக…
அமைதி அல்லது அழிவு ஏற்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில்,…
சிந்து நதிநீரை ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய கால்வாய் கட்டப்படும்: அமித் ஷா
பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய கால்வாய் கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நெடுங்காலமாக…
யாழில் வீட்டிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து தாய் ஒருவரது சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.
வசாவிளான் - சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது 55) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.
இது…
முல்லைத்தீவில் காணாமல் போயிருந்த மீனவர் மரணித்ததாக அறிவிப்பு
முல்லைத்தீவில் தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த (19) அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலில் தேடுதல் நடத்தியும் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த மீனவர்…
யாழில் திடீரென சுழற்றி அடித்த காற்று! மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
யாழப்பாணத்தில் பல பிரதேசங்களில் சற்று முன்னர் பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது திடீரென சுழற்றி அடித்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
தற்போது இடி மழையுடன் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக…
யாழில். ஒரு கிலோ மாவா பாக்குடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண புறநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக , பொலிஸ் புலனாய்வு…