;
Athirady Tamil News
Daily Archives

10 March 2025

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கத்தை கண்டுபிடித்த பிரான்ஸ்!

பிரான்சில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் 92 டிரில்லியன் டொலர் மதிப்புடைய உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் களஞ்சியத்தை கண்டுபிடித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது…

மொத்த உக்ரைன் படைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்த முடியும்… மிரட்டிய எலோன் மஸ்க்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை தீமையின் மொத்த உருவம் என கடுமையாக விமர்சித்திருந்த எலோன் மஸ்க், தற்போது மொத்த உக்ரைன் படைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்த தம்மால் முடியும் என மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சி தரும் கருத்து உலகின் பெரும்…

பாவனைக்குதவாத பெருந்தொகை தேங்காய் எண்ணெய்யுடன் இருவர் கைது

மனித பாவனைக்குதவாத 15,620 லீற்றர் தேங்காய் எண்ணெய்யுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மின்னேரியா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான…

பிரித்தானியாவில் அரசு வேலைகள் குறைப்பு – செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம்

பிரித்தானிய அரசு, அரசு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை உறுப்பினர் பேட் மெக்ஃபாடன் (Pat McFadden) இந்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை BBC-யில் அளித்த பேட்டியில்…

ஆன்லைன் ‘டயட்’டால் கேரள இளம்பெண் உயிரிழந்த சோகம்!

உடல் எடையைக் குறைப்பதற்காக ஆன்லைன் விடியோக்களைப் பார்த்து டயட் இருந்த கேரள பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஸ்ரீநந்தா என்பவர்,…

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் தொழிற்சங்கம்

தபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் இணைந்து…

வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபா் சுட்டுப் பிடிப்பு

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சோ்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினா் (சீக்ரெட் சா்வீஸ்) சுட்டுப் பிடித்தனா். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் வேறு யாரும் காயமடையவில்லை.…

குட்டித்தேர்தலில் குதிக்கும் சமல் ராஜபக்ஷ

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும்…

கனடாவில் வேலை அனுபவம் இல்லாமல் நிரந்தர குடியுரிமை-புதிய திட்டம்

கனடாவில் பராமரிப்பு பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு நபர்களுக்கு, கனடிய வேலை அனுபவம் இல்லாதபோதும் நிரந்தர குடியுரிமை (PR) வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய குடியுரிமை திட்டம் கனடாவின் Home Care Worker Immigration Pilot…

தாயின் அருகில் உறங்கிய குழந்தை உயிரிழப்பு; நடந்தது என்ன?

மட்டக்களப்பு, நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்காடு, இறக்கத்துமுனை பகுதியில் பிறந்து மூன்று…

67 வயது அமெரிக்கருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றம்! 15 ஆண்டுகளில் முதல்…

அமெரிக்காவில் இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மட்டையால் அடித்து கொலை தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரெட் சிக்மன்(67). கடந்த 2001ஆம் ஆண்டில் இவர் தனது முன்னாள் காதலியை…

உறங்கியவர்கள் பணி இடைநீக்கம்!

கண்டி பிரதான புகையிரத நிலையத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட புகையிரத சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே புகையிரதம் பயணித்த போது சமிக்ஞைகளைக்…

சிறுமியை வெளிநாட்டுக்கு அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை

இலங்கை சிறுமி ஒருவரை போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து, ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நப்ருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று…

விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்

கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் நால்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்…

எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரா்கள் தாக்குதல்!

உக்ரைனால் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட கூா்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினா் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரா்கள் பல கிலோமீட்டா் பயணம் செய்துள்ளனா். ரஷியாவின் எல்லை…

தொழிற் சந்தை 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்கமுன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர மற்றும் பகுதிநேர…

திரைப்படத்தை நம்பி இரவு முழுவதும் தங்க புதையலை தேடிய மக்கள் – பரவும் வீடியோ

சாவா திரைப்படத்தால் பரவிய வதந்தியால் அந்த பகுதி மக்கள் தங்க புதையல் இருப்பதாக நம்பி இரவு முழுவதும் தேடியுள்ளனர். சாவா திரைப்படம் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் சாவா என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி…

ஆனையிறவு தேசிய உப்பளத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்

கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களும் இணைந்து நடாத்தும் 2025ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை (2025.03.10) நண்பகல் 12.00 மணிக்கு ஆனையிறவு தேசிய உப்பளத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி ஆனையிறவு…

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் கற்றலுக்கான தேவைகருதி மழலைகளுக்கு தண்ணீர்…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் கற்றலுக்கான தேவைகருதி மழலைகளுக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ உதயன் அன்றில் ராஜா எனும் திரு.குணராஜா உதயராஜா “தேசியத்தின் வலி செல்லும் தமிழன்…

தேர்தல் போட்டியில் சமனிலை பேணப்படுவது அவசியம் – வலியுறுத்தும் மாற்றுக்…

ஒரு நாட்டில் அமைகின்ற அரசுகளே மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றது. அனால் அந்த அரசையும் அரசியலையும் தீர்மனிபது மக்களாக இருக்கின்றனர் என சுட்டிக்காட்டிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் (CMEV) பணிப்பாளர் விக்ரர், தமக்கான அந்த…

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. நேபாளத்தில் நடைபெற்ற போராட்டங்களைத் தொடா்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலா்ந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரியில்…

வீதியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை : ஆதரவளித்த பொலிஸார்

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று இன்று (10) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ்…

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு ; பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 இல் நடைபெறும் என்றும் பிரதமர்ஹரிணி அமரசூரிய கூறினார். கல்வி, உயர்கல்வி மற்றும்…

சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 போ் பலி!

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் பஷாா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய…

கும்பமேளாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட தீவிரவாதி திடுக்கிடும் வாக்குமூலம்

கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினால் வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர் என உ.பி.யில் கைதான தீவிரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த…

கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும்,கனடாவின் 24-வது…

யாழில் வீதிகளில் குப்பை போடுபவர்களை கண்காணிக்க ; சிசிடிவி கேமரா

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் குப்பை போடுவோரை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைக்கு ஏதுவாக நகரம் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ் மாநகர சபை மேற்கொண்டு வருகிறது. யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில்…

கோர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழப்பு; தேவாலயம் சென்று திரும்புகையில் நேர்ந்த துயரம்

மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தலவில தேவாலயத்தில் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய‌ போதே, நேற்று (09) மாலை இந்த விபத்து…

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர். எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு போராட்டம் ஆரம்பமாகி மறுநாள்…

9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார். அமெரிக்காவின் போயிங் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி…

25 ஏக்கர் நிலம் ; சர்ச்சையில் சிக்கிய முத்தையா முரளிதரன்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனமான சிலோன் பெவரேஜஸுக்கு 25 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கியது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சர்ச்சையை எதிர்கொண்டதாக இந்திய ஊடகங்கள்…

யாழில் ஆசிரியர் திடீர் மரணம்

வீட்டில் மயக்கமுற்ற நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் உயரிழந்துள்ளார். வடமராட்சி வதிரியைச் சேர்ந்த நெல்லியடி மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் தணிகைவேள் (வயது-45) என்பவரே…

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது தொடா்பாக மூன்று போ் கைது…