;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வேன் விபத்து; நால்வர் வைத்தியசாலையில்

அநுராதபுரம் - ரம்பேவ ஏ9 பிரதான வீதியில் பரசன்கஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்…

புலமைப் பரிசில் பரீட்சையில் யாழில் சாதனை படைத்த மிக சிறிய பாடசாலை; அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாணம் செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது 2025 ஆம் ஆண்டின் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது. செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 30 மாணவர்கள் புலமைப்பரிசில்…

இலங்கையில் வங்கி இணையத்தள மூலம் 600 மில்லியன் ரூபா மோசடி; மக்களே அவதானம்!

இலங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை போல உருவாக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் மூலம், 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பணம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

டெங்கு நோய் கட்டுப்பாட்டுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் தலைமையில் இன்றைய தினம் (04.09.2025) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்…

இந்தோனேசியாவில் மாயமான ஹெலிகாப்டா்: தேடும் பணி தீவிரம்

இந்தோனேசியாவில் இந்தியா் உள்ளிட்ட எட்டு பேருடன் மாயமான ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவா் ஐபுடு சுதயானா கூறியதாவது: எஸ்டிண்டோ ஏா் நிறுவனத்துக்குச்…

பற்றி எரியும் இந்தோனேசியா… ‘பிங்க்’ உடையில் போராட்டக் களத்தில் குதித்த பெண்கள்…

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றுதான் இந்தோனேசியா. உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு என்ற அடையாளம் கொண்டது. பூகோள ரீதியாக நிலநடுக்கங்கள், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதி. பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும்…

யாழில். வீட்டு திட்ட வீடுகளுக்கான மிகுதி நிதி அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும்

கடந்த ஆட்சி காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளுக்கான மிகுதி நிதி அடுத்த ஆண்டு முதல் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி. பி.…

பிரிட்டனில் காா்கள் மோதல்: 2 இந்திய மாணவா்கள் உயிரிழப்பு

பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள எஸ்ஸெக்ஸ் பகுதியில் 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் தெலங்கானாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும் 5 மாணவா்கள் படுகாயமடைந்தனா். பிரிட்டனில் பயிலும் தெலங்கானா மாணவா்கள் சிலா், எஸ்ஸெக்ஸ் பகுதியில்…

159 வது ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவினை முன்னிட்டு கற்றல் உபகரண தொகுதிகள்…

video link- https://fromsmash.com/M-3vcbR45p-dt இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாட்டில் கல்முனை இயேசு சீவிக்கின்றார்…

செம்மணி வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து

யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை பயணிப்பதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய பாரவூர்திகள் முற்பகல் 7 மணி…

அமெரிக்கா இல்லாமல் உலகில் அனைத்தும் இறந்துவிடும் ; சர்ச்சையை கிளப்பும் ட்ரம்பின் கருத்து

அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் இறந்துவிடும் என அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். ஓவல் அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகப்பெரியதாக மாற்றினேன்.…

இங்கிலாந்தை விட சோமாலியா பாதுகாப்பானது; கண்ணீர்விடும் ஏதிலி!

பாதுகாப்புத் தேடி இங்கிலாந்திற்கு வந்த சோமாலியாவைச் சேர்ந்த அகதி ஒருவர், “தயவுசெய்து என்னை மீண்டும் சோமாலியாவுக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள். இந்த நுனாட்டன் நகரை விட என் நாடு மிகவும் பாதுகாப்பானது” என அதிகாரிகளிடம் கெஞ்சிய சம்பவம் பெரும்…

இந்தூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: எலிகள் கடித்த 2 பச்சிளம் குழந்தைகள் மரணம்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில், பிறவிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு,…

யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மனின் தேர்த்திருவிழா ; அம்மனின் ஆசி பெற திரண்ட பக்தர்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று சப்பறத்திருவிழா…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; 51 ஆயிரம் அதிக மாணவர்கள் தேர்ச்சி

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் 51 ஆயிரத்து 969 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. சிங்கள மொழி மூலத்திற்கான வெட்டுப் புள்ளிகள் 140 எனவும், தமிழ் மொழிக்கான வெட்டுப் புள்ளிகள்…

புலமைப்பரிசில் பரீட்சை ; சிங்கள மொழியில் சாதனை படைத்த மாணவி

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.…

கைவிட்டு போகும் மகிந்த ராஜபக்ஷ இல்லம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரச…

சீன ராணுவ அணிவகுப்பு! ஒன்றாகக் கலந்துகொண்ட சீன, ரஷிய, வடகொரிய அதிபர்கள்! முதல்முறை…

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அந்த நாட்டு அதிபர் ஜின்பிங்குடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கலந்துகொண்டனர். இவர்கள் மூவரும் முதல்முறையாக ஒன்றாகக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இதுவாகும். இரண்டாம்…

யாழில். பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவால் உயிரிழப்பு

யாழில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இது…

பாகிஸ்தானில் பலூச் கட்சியின் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்! 14 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் பேரணியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவில், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் நிறுவனர் சர்தார் அட்டாவுல்லா மெங்காலின் 4 ஆம் ஆண்டு…

கொழும்பில் 4ஆவது குவியம் விருதுகள் விழா

இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் குவியம் ஊடகம் ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குவியம் விருதுகள் நிகழ்வு எதிர்வரும்…

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை

வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை…

யாழ் . இந்து மாணவன் முதலிடம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளை பெற்று யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்றுள்ளார்.

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அதிகபட்ச புள்ளிகளின் விபரம்

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, 51,969 மாணவர்கள் (17.11 வீதம்) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்…

செம்மணியில் இரு என்புகூட்டிற்கு மேலாக ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு பெரிய என்புக்கூட்டு தொகுகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒப்பிட்டளவில் சிறிய எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம்…

தொடரும் வரதட்சிணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!

கர்நாடக மாநிலத்தில் வரதட்சிணை கொடுமையால் 28 வயது பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டேவில் வசித்துவந்தவர் பூஜாஸ்ரீ. இவர் வங்கி ஒன்றின் காசாளராக பணியாற்றி வந்தார். இவர் தனியார்…

புடினிடம், கிம் ஜாங் உன் சொன்ன ஒற்றை வார்த்தை: உலகிற்கு ராணுவ பலத்தை காட்டிய சீனா!

சீனாவின் வெற்றி அணிவகுப்பில் ஷி ஜின்பிங், விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு இருப்பது உலக அரங்கில் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட சீன இராணுவ பலம் ஜப்பானை இரண்டாம் உலக போரில்…

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த சம்பவம் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் பழகிய 52 வயதுப் பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 26 வயது இளைஞர் அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில்…

யாழ்ப்பாண நீதிபதிகள் மூவருக்கு இலங்கையில் கிடைத்த உயரிய அந்தஸ்து

யாழ்ப்பாண நீதிபதிகளில் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேர் நியமிக்கப்பட்டு நியமனக் கடிதங்கள் நேற்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி…

யாழில் திடீரென உயிரிழந்த பச்சிளம் சிசு ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை

பிறந்து 5 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்துள்ளது. சிசுவின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி…

“பில்லி சூனியம்” ; ஸ்பெயின் சென்ற அகதிகள் நடுக்கடலில் கொலை செய்யப்பட்டார்களா?

ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி சென்ற படகில் 70 அகதிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்காப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட இந்தப் படகில் சுமார் 320 பேர் இருந்ததாகக்…

நோய்களால் அவதிப்படுகிறாரா டொனால்ட் டிரம்ப்? வதந்திகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடல் நிலை குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பேசு பொருளாக உருவான நிலையில் அதற்கு டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். டிரம்ப் உடல் நிலை வதந்திகளும், முற்றுப்புள்ளியும் சமூக ஊடகங்களில் கடந்த…

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தை நாடவும். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5…

அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசிய கனடிய பிரதமர்

கனடிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கனடிய அமைச்சரவை கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி…