;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

நடமாடும் வியாபாரங்கள் பிரதேச சபையில் முன் அனுமதி பெற வேண்டும் – கரவெட்டி பிரதேச…

பழைய பொருட்களை வாங்கி விற்கும் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் வீடு வளவுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடாத்தாக எடுத்துச் செல்லும் பல சம்பவங்கள் வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன. முதியவர்கள்,…

அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் ‘நாசா’வையும் விட்டு வைக்கவில்லை

அரசு நிதியுதவி தடைபட்டதால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தற்காலிகமாக முடக்கத்திற்கு ஆளாகியுள்ளது. அரசு நிர்வாக செலவினங்களுக்கான பட்ஜெட் அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேறவில்லை. இதையடுத்து அங்கு அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.…

உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டியின் சடலம் உறவினர்களிடம்…

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல் ஹிதாயா பாடசாலை வீதி ஊடாக கூழாவடி சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.…

ஆக்ராவில் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி இருவர் பலி, 6 பேர் மாயம்

ஆக்ராவில் சிலை கரைக்கும் போது ஆற்று நீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள உதங்கன் ஆற்றில் வியாழக்கிழமை சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி 2 பேர் பலியானதோடு ஆறு பேர் காணாமல் போனதாக அதிகாரிகள்…

ரணிலுக்கு தயிர் , தேன் பரிசாக வழங்கிய மஹிந்த ராஜபக்க்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பல தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகளை வழங்கியுள்ளார். சமீபத்தில் தங்கல்லவில் உள்ள மஹிந்தவின் கார்ல்டன் இல்லத்திற்கு அவரது நலம் விசாரிக்க சென்றபோது, இந்தப்…

வயலில் வைக்கோலுக்கு தீவைத்தவர் உயிரிழப்பு

ஹிங்குரக்கொடை வராஹேன பகுதியில் உள்ள விவசாயி ஒருவர், நேற்று (03) மதியம் தனது நெல் வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர், ஹிங்குரக்கொடை போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். வரும் போகத்திற்காக…

அதிக வேகத்தில் பயணித்த லொறி மாணவனின் உயிரை பறித்தது

கம்பஹா - மினுவாங்கொடை வீதியில் வீதியவத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் 15…

ஹாலிவுட் நடிகரை நம்பி 6 கோடியை இழந்த மூதாட்டி

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் நகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு ஆன்லைன் மூலம் ஒருவர் அறிமுகம் ஆனார். அந்த நபர் தன்னை அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா என்று கூறியிருக்கிறார். மேலும், தனக்கு ஒரு வாழ்க்கை துணை…

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது,…

27 வயதில் ஏழு குழந்தைகள்! பிரித்தானியா பெண்ணின் வினோதமான ஆசை

16 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த பெண் ஒருவர் 8வது குழந்தையை எதிர்பார்க்கிறாராம். அடுத்த குழந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த 27 வயதான ஷர்னே என்ற பெண் ஒருவர் மூன்று வெவ்வேறு நபர்களுடன் ஏழு குழந்தைகளுக்கு தாயான நிலையில் எட்டாவது குழந்தையை…

காசாவில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஆயுத குழு இடையே மோதல்: 5 பேர் உயிரிழப்பு

காசாவில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன குழுக்களுக்கு இடையே உள்நாட்டு மோதல் வெடித்து இருப்பது பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் ஹமாஸ் பாதுகாப்பு படைக்கும், பாலஸ்தீனத்தின் அல்-முஜைடா குலத்தை சேர்ந்த ஆயுத…

பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய…

பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய விமானப் படை தளபதி தகவல் புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானின் 10 போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தினோம் என்று இந்​திய…

இலங்கையில் வடிகாணில் பிறந்த சிசு; அதிர்ச்சியில் பொலிஸார்

மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.…

“சொல்லில் அல்ல, செயலில் நிரூபிக்கிறது”: குறிகாட்டுவான் வீதி, இறங்குதுறை…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.…

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ். புனித…

உலகம் மீண்டும் ஒரே பதற்றத்தில் ; அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்

அமெரிக்காவில் கொரோனா வைரசை போன்று புதிய உருமாறிய வடிவமான 'ஸ்ட்ரேடஸ்' வேகமாக பரவி வருவதாகவும் நடப்பாண்டு ஜனவரியில் தென்கிழக்கு ஆசியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

நாவலியில் துப்பாக்கி ரவைகளை மீட்ட பொலிஸ் விசேட அதிரடி படையின் குண்டு செயலிழக்க செய்யும்…

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றின் மலசல கூட குழியில் காணப்பட்ட பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் நீதிமன்ற அனுமதியுடன் மீட்கப்பட்டுள்ளது. நவாலி வடக்கில் நீண்டலமாக பராமரிப்பு இன்றி காணப்பட்ட காணி ஒன்றினை அதன் உரிமையாளர் நேற்று முன்தினம்…

ட்ரோன் ஊடுருலால் ஜேர்மனில் விமான சேவை பாதிப்பு!

ஜேர்மனின் மியூனிக் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (02) மாலை சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் விளைவாக, 17 விமானங்கள் இரத்து…

ஒரே நாளில் மூன்று தடவைகள் பழுதடைந்து வீதியில் நின்ற பேருந்து – தரமான போக்குவரத்து…

வடமராட்சி கிழக்கு பகுதிக்கு தரமான பேருந்து சேவையினை வழங்குமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , பழுதடைந்த பேருந்து ஒன்றே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.…

யாழில். சுகாதார விதிமுறைகளை பேணாத உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 60ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பேணாத உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றுக்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும்…

யாழில். எலி எச்சங்களுடன் உணவு பொருளை விற்பனைக்கு வைத்திருந்த உரிமையாளருக்கு தண்டம்

பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட…

மருதங்கேணியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள்கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று வெடிகுண்டுகள் இனங்காணப்பட்டுள்ளது குறித்த காணியினை காணி உரிமையாளர் துப்பரவு செய்ய வேளை காணிக்குள் வெடிக்காத நிலையில்…

இருமல் மருந்தால் 6 குழந்தைகள் பலி!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் எனப்படும் இருமல் மருந்தை குடித்த 6 குழந்தைகள் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த மருந்து நிறுவனத்தின் காஞ்சிபுரம் ஆய்வகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் இருமல்…

இந்தோனேசிய கட்டட விபத்து: மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் இருந்து மேலும் 3 மாணவா்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.…

கொல்லப்பட்டதாக நினைத்த பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

கொல்லப்பட்டதாக நினைத்த பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிருடன் வந்த பெண் இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 2023-ம் ஆண்டில் காணாமல் போனார். இதையடுத்து, தனது பெண்ணை கணவர்…

யாழில்.தீப்பந்த போராட்டம்

அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிரான தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக…

யாழில். ‘வியாக்ரன்’ நூல் அறிமுக விழா

இ.சு.முரளிதரனின் 'வியாக்ரன்' நூல் அறிமுக விழா கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய அதிபர் கே.கே.தவகீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்…

யாழில் 2வது மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி ; வாக்குமூலத்தால் வெளியான காரணம்

யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார். இந்த…

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

ஜப்பானின் பழம்பெருமை வாய்ந்த பீர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ‘ஆசாஹி’ மீது இணையவழி(சைபர்) தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்றும் (வெள்ளிக்கிழமை) முடங்கியுள்ளன. இதனால், ஜப்பானில்…

தாக்குதல் தொடர்கிறது! காஸாவுக்கான உதவிகளையும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதற்கிடையே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன ஆதரவு பெற்ற…

அமெரிக்காவில் வேலை இல்லை; கண்ணீருடன் வெளியேறிய இந்திய பெண்

அமெரிக்காவில் பல மாதங்களாக வேலை தேடியும், வேலையை பெற முடியாததால், இந்திய பெண் அனன்யா ஜோஷி, கண்ணீருடன் அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார். வடமேற்கு பல்கலைக்கழகத்தில் 2024 ஆம் ஆண்டு உயிரி தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்ற ஜோஷி, ஒரு…

அமெரிக்காவில் ஓடுபாதையில் பரபரப்பு ; மோதிக்கொண்ட இரு விமானங்கள்!

அமெரிக்காவில் ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்…

பிரித்தானிய காடொன்றில் கைது செய்யப்பட்ட பழங்குடியின மன்னர்

பழங்குடியின மன்னர் என தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவரும், அவரது குழுவினரும் ஸ்கொட்லாந்திலுள்ள காடொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பழங்குடியின மன்னர் நேற்று காலை 8.00 மணியளவில், ஸ்கொட்லாந்திலுள்ள Jedburgh என்னுமிடத்தில் அமைந்துள்ள…

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (03) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா…