;
Athirady Tamil News
Yearly Archives

2026

19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் இது கட்டாயம்!

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்…

ஜெர்மனி மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி

பெர்லின், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி அரசியலில் இதுவரை இல் லாத ஒரு மாபெரும் அரசியல் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாக்சனி-அன்ஹால்ட் மாகாணத்திற்கு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில், அதிபர் பிரீட்ரிக் மெர்சின்…

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை கடல் எல்லைக்கு அருகில் 47 கப்பல்கள்!

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையில் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

கொலம்பியாவில் ருசிகரம்: புறணி பேசி 2 வீடுகள் வாங்கிய மூதாட்டி

பொகோட்டா, கொலம்பியாவில் அக்கம்பக்கத்தில் நடக்கும் வதந்திகளையும், பிறருடைய ரகசியங்களையும் சேகரித்து விற்பனை செய்ததன் மூலம், கொலம்பியாவைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி ஒருவர் 2 சொந்த வீடுகளை வாங்கியுள்ள விசித்திரமான சம்பவம்…

இளவரசர் ஹரி, மேகன் தொடர்பில் மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஹரியும் மேகனும் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்கு முன் கோபித்துக்கொண்டு ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்.…

பாகிஸ்தானில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டத்தை சேர்ந்த 57 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று வீடு…

யாழில் கிணறுகள் திடீரென பெருக்கெடுத்ததால் பரபரப்பு; பிரதேசவாசிகள் அச்சம்!

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போதைப்பொருள் விற்பனை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு ஊழியர்கள் மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைதான 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள், மாளிகாகந்த நீதவான்…

வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்; பிரதமர் ஹரிணி கூறிய விடயம்!

வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாடாளும்ன்றில் இன்று (8) தெரிவித்துள்ளார். வட மாகாண பாடசாலைகளில்…

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 9 பேர் பலி

பெரூட், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் அண்டை நாடு லெபனான். இந்நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல்…

பலாலியில் வீடுகள் கையளிப்பு

பலாலி வடக்குப் பகுதியில், மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்ட இரண்டு புதிய வீடுகள், கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான சேவை பாதிப்பு

ஜகார்தா, இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துள்ளது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான மலைகள் உள்ளன. இதில் 130 எரிமலைகள்…

ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

ஊர்காவற்துறை கோட்டையின் பாதுகாப்பு, வரலாற்று முக்கியத்துவத்தைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுலா மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, சுற்றுலா அமைச்சின் நிதியுதவியுடன் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.…

யாழில். துரித கெதியில் முன்னெடுக்கப்படும் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், கந்தரோடை குளம்,…

யாழில். கலைமாமணி சாரதா ராகவ் குழுவினரின் இசை நிகழ்வு

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து வருகை தந்த கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி சாரதா ராகவ் மற்றும் அவரது குழுவினரால் வழங்கப்பட்ட கர்நாடக பக்தி இசை…

யாழ்ப்பாணத்தில் செப்டம்பர் 26இல் விசேட தொழிற்சந்தை: மாவட்டச் செயலர் ம.பிரதீபன் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக்கான கோரிக்கை அதிகமாக இருந்தாலும், தொழில் வழங்குநர்கள் எதிர்பார்க்கும் வகையில் பணிக்கு தொடர்ச்சியாக வருதல், பொறுப்புடன் பணியாற்றுதல் மற்றும் தொழில்திறனை மேம்படுத்திக் கொள்ளுதல் போன்ற விடயங்களில் சில குறைபாடுகள்…

5,000 டன் எடைகொண்ட காங் கோன் போர்க்கப்பல் வடகொரியா அணுசக்தி படையில் இணைப்பு

பியாங்யாங், அணுசக்தி தடுப்பு காவல்படையின் ஒரு பகுதியாக, 5,000 டன் எடைகொண்ட 'காங் கோன்' என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலை வடகொரியா தனது கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது. புதிய போர்க்கப்பல் அறிமுகம்…

குதிரையில் எழுந்தருளிய நல்லூரான்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை 22ஆம் திருவிழா இடம்பெற்றது. 22ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானை ஆகியோர் தலா  மூன்று குதிரைகளிலும், வேல்…

புலமைப்பரிசிலில் மாகாண மட்டத்தில் முதலிடம் பிடித்த அல்-மனார் மாணவிக்கு கல்முனை வலயக் கல்வி…

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிமூலத்தில் முதலாமிடத்தையும், கல்முனைக் கல்வி வலயத்தில் முதன்மை இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்த மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி…

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி (SLEAS III) அருட்தந்தை ஜெ. லெபோன் சுதன்  நேற்று (07) உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பாடசாலையின் அதிபராகக்…

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு…

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த ஐந்து மாணவர்களுக்குப் பணப்பரிசுகளும், பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய மாணவர்களுக்கு நினைவுச்…

கல்முனையில் 160 ஆவது பொலிஸ் தின நிகழ்வு- பள்ளிவாசலில் சிறப்பு துஆப் பிரார்த்தனை

160 ஆவது பொலிஸ் தின விழாவை முன்னிட்டு கல்முனையில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி களுவாராச்சியின் தலைமையில், கல்முனை பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி…

102 வயது மூதாட்டியின் சாதனை: புதிதாக கட்டப்பட்ட சர்வதேச பாலத்தை நடந்து கடந்து பிறந்தநாள்…

ஒட்டாவா, கனடா நாட்டைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் புதிய சர்வதேச பாலத்தை நடந்து கடந்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்த…

அம்பாறையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகும் யானைகள்: மக்கள் பீதி(video/photoes)

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.…

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா, பிரதேச செயலாளரா? மேன்முறையீட்டு நீதிமன்றில் அம்பலமான…

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு கடமையாற்றுபவர் ஒரு "உப பிரதேச செயலாளர்" மட்டுமே தவிர, அவர் "பிரதேச…

7 குழந்தைகளின் தாயான எழுத்தாளர்: ஜப்பான் பெண்களுக்கு சொன்னது என்ன?

டோக்கியோ, ஜப்பானைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், முன்னாள் அரசியல் வேட்பாளருமான கோட்டோய் ஹாஷிமோட்டோ தனக்கு 7-வது குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். அத்துடன், ஜப்பானின் மக்கள் தொகை சரிவைத் தடுக்க மற்ற…

மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து… அமேசான் சரக்கு விமானம் தீப்பிடித்து 5 பேர்…

மியாமி, அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் போர்ட்டோ…

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது! போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமானங்கள் ரத்து

இந்தோனேசியாவில் அனக் கிரகத்தாவ் எரிமலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடித்துச் சிதறியதையடுத்து நாட்டின் மேற்குப் பகுதிகளில் எரிமலைச் சாம்பல் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக ஜகாா்தா சா்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து…

வெளிநாடொன்றில் பிரபல டிவி தொகுப்பாளினி உட்பட 12 பேருக்குத் தூக்கு தண்டனை!

எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றக் கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 39 வயதான சாரா…

பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்து

காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து பலத்த சேதமடைந்ததாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பேருந்து சாரதி…

வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் ; அமெரிக்காவுக்கு ஈரான் கடும்…

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராணுவ மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. கடந்த…

சீனாவில் நிலச்சரிவு: இருவா் உயிரிழப்பு; 10 போ் மாயம்!

சீனாவின் சுய்சுவான் பகுதியில் ‘செளடெல்’ புயலால் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 10 போ் மாயமாகினா். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கடந்த ஆக.28-இல் கரையைக் கடந்த செளடெல்…

முல்லைத்தீவில் கரை ஒதுங்கும் இறந்த மீன்கள்!

முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான இறந்த மீன்கள் கடந்த சில…