;
Athirady Tamil News
Yearly Archives

2026

3 சீனர்களை பிடிக்க பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்

கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல், கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீன நாட்டவர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம்…

மியான்மரில் புத்த மடாலயம் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

நேபிடா, மியான்மரின் மத்திய பகுதியில் உள்ள சாகைங் பிராந்தியத்தில் புத்த மடாலயம் மீது ராணுவ விமானம் நடத்திய வான்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். மியாங் நகரில் இருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்வெல்…

பல நாடுகளிடம் இருந்து குப்பைகளை வாங்கும் வினோத நாடு: எதற்காக தெரியுமா?

சுவீடன், பல நாடுகளில் நாளுக்கு நாள் குப்பைகளின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அதனை கொட்டுவதற்கு இடமில்லாததால் சுவீடன் நாட்டில் குப்பையை இறக்குமதி செய்கின்றனர். ஒரு டன் குப்பைக்கு 43 டாலர் கொடுக்க வேண்டும் என சுவீடன் அரசு…

மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு

அனுராதபுரம் -கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாவ – ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். துயர சம்பவம் நேற்று (21) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் உயிரிழந்தவர்…

இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

பிளாக்வாட்டர் நதிப் பள்ளத்தாக்கில் பிரம்மாண்டமான எஸ்டேட்களை வாங்கிய மெட்டா நிறுவனர்

டப்ளின், மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தின் வாட்டர்போர்ட் கவுண்டியில் அமைந்துள்ள பிளாக்வாட்டர் நதிக்கரையில் உள்ள 440 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட வரலாற்று…

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை: வவுனியா மேல் நீதிமன்றத் தீர்ப்பு!

2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். கடந்த…

ஒரே நாளில் 426 திருமணங்கள்… குருவாயூரில் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு!

திருச்சூர், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நாளை மறுநாள் 426 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோவிலுக்குள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி இல்லை என்று உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு…

தலையில் காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

இரத்தினபுரி - இறக்குவானை, கலஹிட்டிய பகுதியில் வீடொன்றிற்குள் மூதாட்டி ஒருவர் தலையில் காயங்களுடன் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணயை மேற்கொண்டு வருகின்றனர். பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துக்…

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த மின் விளக்குகளால் கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மதியம்…

லக்னோ: மனை​வி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை

லக்னோ: மனை​வி, சகோ​தரியை சுட்​டுக் கொன்ற வங்கி அதிகாரி துப்​பாக்​கி​யால் சுட்டு தற்கொலை செய்து கொண்​டார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்​தவர் மனஸ் பாஜ்பாய். எஸ்​பிஐ வங்​கி​யில் அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தார். இவரது மனைவி திவ்யா…

கனடாவில் நான்கு வயது சிறுவனின் சாதனை

கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த அலி அல்தாலவி என்ற 5 வயது சிறுவன், தனது 4 வயதிலேயே ஐக்யூ தேர்வில் 160 புள்ளிகள் பெற்று உலகளவில் உள்ள 0.1 சதவீத முன்னணி அறிவுத்திறன் கொண்ட சிறுவர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். உலகின் பழமையான மற்றும்…

ஏமன்: 16 இந்தியர்கள் உள்பட 20 பேருடன் சென்ற எண்ணெய் கப்பல் கடத்தல்

சனா, அமெரிக்கா, ஈரான் போரின் போது ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். மேலும், சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்களை…

இலங்கைக் கடற்பரப்பில் குறையும் மீன் வளம்!

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக்…

சடையம்மா சித்தரின் 95ஆவது குருபூசை

ஈழத்தின் பெண் சித்தரான சடையம்மா சித்தரின் 95ஆம் ஆண்டு குருபூசை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. "பசி என்று வந்தவர்க்கு முகம் கோணாது உணவளிப்பதே மிகச்சிறந்த பூஜை"  என நாடி வருவோருக்கு உணவளித்து வந்த சடையம்மா சித்தர் 1931ஆம்…

வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியை அடித்ததில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: வி​சாகப்​பட்​டினத்​தில் உள்ள ‘லிட்​டில் கார்​டன்’ தனி​யார் பள்​ளி​யில், வீட்டுப்பாடம் செய்​யாததற்​காக ஆசிரியை அடித்​த​தில், 6 வயது சிறுவன் பிரணய் தேஜா வகுப்​பறை​யிலேயே மயங்கி விழுந்து உயி​ரிழந்த சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை…

சோமாலியா: 6 இந்தியர்கள் உள்பட 10 மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தல்

மொகாதிசு, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்திய பெருங்கடல் அமைந்துள்ள இந்நாட்டில் கடற்கொள்ளையர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய பெருங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை சிறைபிடித்து கடற்கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டு…

கிளிநொச்சியில் சிறுவனுக்கு எமனான உழவு இயந்திரம்; சாரதி கைது

கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி…

யாழ் பண்டத்தரிப்பு ஆலய சம்பவம் ; 400 பேர் கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில்…

கனடாவில் மனிதக் கடத்தல்: சோமாலிய அகதிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!

கனடாவின் மனிட்டோபா எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்குப் பணத்திற்காக உதவிய சோமாலிய அகதி அப்தி ஹாசன் அலிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிணையில் வெளிவந்த நிலையிலும் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டது…

வாகனங்கள் , உந்துருளிகள் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு; பொலிசார் எச்சரிக்கை

வாகன ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளிகளின் பயணிகள் வாகனங்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால், வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில், வாகனங்களுக்குள்…

ஒரு நபருக்கு 9 சிம்கார்டு மட்டுமே: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் 24 முதல், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி புதிய சிம்கார்டு பெற முயலும் ஒவ்வொரு சந்தாதாரரையும் அடையாளம் காணும்…

வட மாகாணத்தில் கடும் வறட்சி ; தாகம் தீர்க்கும் கடற்படையினர்

வட மாகாணத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு இலங்கை கடற்படையினர் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ்,…

இந்தியாவில் ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்த மீண்டும் விண்ணப்பித்த எலான் மஸ்க்!

புதுடெல்லி எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையைத் தொடங்க இதற்கு முன்னதாக ஒப்புதல் பெறுவதில் தடைகளை எதிர்கொண்ட நிலையில், மீண்டும் விண்ணப்பித்துள்ளது. உலகின் முன்னனி தொழிலதிபர் மற்றும் உலகின் பணக்காரர் பட்டியலில்…

எல் நினோ வறட்சி அச்சுறுத்தல் ; நீர் விநியோகத்தில் புதிய நடவடிக்கை

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 நபர்கள் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது. அம்பாறை, பொலன்னறுவை,…

எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு

எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளித்துள்ளார். எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால்…

யாழ். பண்டத்தரிப்பு சம்பவம் ; கண் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்வு

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர்…

எம்.பி. மகன் ஓட்டிய கார் மோதி இளம்பெண் பலி – அதிர்ச்சி சம்பவம்

ஐதராபாத், தெலுங்கானா மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யான். இவர் ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சியை சேர்ந்த எம்.பி. லிங்கமனேனி ரமேஷ். இவரின் மகன் லிங்கமனேனி சஞ்சுஸ் (வயது 21). எம்.பி. மகன் கார் மோதி இளம்பெண் பலி…

அதிரும் அமெரிக்காவின் கடன்: ரூ. 3,840 லட்சம் கோடியை எட்டியது…!

வாஷிங்டன், அமெரிக்காவின் தேசிய பொதுக்கடன் 3,840 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்காவின் கருவூலத்துறை, வர்த்தகம் முடியும் நேரத்தில் நாள்தோறும் நிதி அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அதன்படி கடந்த 18ம்…

ஆப்பிரிக்கா: தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு

பாங்குயி, மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து மண்ணில் புதைந்து பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. ஆபத்தான சூழலில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான கிராமப்புற…

வரலாறு காணாத உச்சம் ; 8 மாதங்களில் ரூ.3,840 லட்சம் கோடியாக உயர்ந்த அமெரிக்காவின் கடன்

அமெரிக்காவின் தேசியப் பொதுக்கடன், 3,840 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்காவின் கருவூலத்துறை, வர்த்தகம் முடியும் நேரத்தில் நாள்தோறும் நிதி அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அதன்படி கடந்த 18ம் திகதி…

60 மணி நேரத்தில் சீனா, துருக்கி ராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் ; பரபரப்பு தகவல்

சீனா மற்றும் துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து வந்திறங்கிய கனரக ராணுவ விமானங்களில் போர் தளவாடங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே உள்ள நூர் கான்…

யாழில் ஆலயத் திருவிழா அனர்த்தம்; 235 பேர் சிகிச்சை! நிரம்பிவழியும் மருத்துவமனை

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தில், இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை…

நைஜீரியாவில் படகு விபத்து ; சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சோகோடோ மாநிலத்தில்,அதிக பாரம் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மரப்…