;
Athirady Tamil News
Yearly Archives

2026

நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4…

சீன காதலர் தினம்: 2000 ட்ரோன்கள் வானில் பறக்கவிட்டு பிரம்மாண்ட சாகசம்!

பெய்ஜிங், சீனாவின் பாரம்பரிய காதலர் தினமான 'கிக்சி திருநாளை' முன்னிட்டு, சுமார் 2,000 அதிநவீன ட்ரோன்கள் வானில் பறக்கவிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட ஒளிக்காட்சி சாகசம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாரம்பரியமும்…

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக வாணர் பாலத்தில் சூரிய சக்தி மின் விளக்குகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக வாணர் பாலத்தில் சூரிய சக்தி மின் விளக்குகள் மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

கலிபோர்னியாவில் தீபாவளியை கொண்டாட தீர்மானம் நிறைவேற்றம்

வாஷிங்டன், கலிபோர்னியா மாநில சட்டசபை நவம்பர் 8ம் தேதி தீபாவளியைக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீபாவளி பண்டிகை உலகெங்கும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தீபாவளி ஆகும். தீபாவளி பண்டிகை வருகிற…

குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு; கணவர் உயிரிழப்பு மனைவி கைது

குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இந்தியாவின் டெல்லியில் அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நொய்டா நிறுவனத்தில்…

பலாலியில் 10 ஆவது வாரமாக போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  10ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கோஷங்களை…

யாழில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் ; பிரதமர் ஹரிணி

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி கல்வியில் முன்னேறி வருவது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற…

உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 16 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இரத்தினபுரி, எஹலியகொட பகுதியில் அமைந்துள்ள கல் பொத்தஹேன குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணை இவ்வாறு உயிரிழந்தவர் மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத்…

வவுனியா பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

வவுனியா பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் வவுனியா பல்கலைக்கழகத்தில் ரூ.231 மில்லியன் செலவில் அமைப்பதாக திட்டமிடப்பட்டுள்ள மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது இலங்கையின் பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும்…

கனடா: சீக்கிய மத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 2 பேர் படுகாயம்

ஒட்டாவா, கனடாவில் இந்தியாவை சேர்ந்த சீக்கியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேலும், அந்நாட்டில் சீக்கிய மத வழிபாட்டு தலங்களும் ஏராளமாக உள்ளன. இதனிடையே, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் எட்மன்டன் நகரில் சீக்கிய மத வழிபாட்டு தலமான …

சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!

சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி…

அதிகாலையில் நேர்ந்த கொடூர தாக்குதல் ; விருந்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது

அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; சாரதிகளின் கவனத்திற்கு

எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர…

யாழில் பெண்ணுடன் கைதான இருவர் ; விசாரணையில் அம்பலமான விடயம்

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு…

யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; பெண் பிள்ளைகள் மிகுந்த அவதானம்

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

3 மணிநேரம், 40 அடி ஆழம்… கிணற்றுக்குள் சிறுமியின் மரண போராட்டம்

லக்னோ உத்தர பிரதேசத்தில் 40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுமி 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டாள். உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத்தில் கைம்கஞ்ச் பகுதியில், அனன்யா என்ற சிறுமி, இளைய சகோதரி…

வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவியுங்கள் – பிரதமரிடம் கோரிக்கை

வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள் குரல் அமைப்பினர் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமர…

யாழில். 14 வயது சிறுமியை கடத்தி சென்ற 27 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.  கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமை, கல்வி மற்றும் சமவாய்ப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்

உரிய வாய்ப்பு வழங்கப்பட்டால் மாற்றுத்திறனாளி மாணவர்களும் நாட்டின் முன்னேற்றத்தில் அளப்பரிய பங்களிப்பை வழங்க முடியும். எனவே  மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமை, கல்வி மற்றும் சமவாய்ப்பை உறுதிப்படுத்தும் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து…

வடக்கு கிழக்கிலையே அதிகளவான மாற்று திறனாளிகள்

எமது நாட்டில் அதிகளவிலான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசிக்கின்றார்கள், அது அந்தக் கசப்பான போரின் மற்றுமொரு விளைவாகும். அதனால் மீண்டுமொரு போர் ஏற்பாடாதவாறு அரசாங்கம் என்ற வகையில் செயற்படுவோம்  எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி…

டிக்டாக்-க்கு ரூ3,828 கோடி அபராதம்: குழந்தைகளின் தனியுரிமை வழக்கில் அமெரிக்க அரசுடன்…

வாஷிங்டன் குழந்தைகளின் தனியுரிமைச் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில், டிக்டாக் நிறுவனம் அமெரிக்க நீதித்துறையுடன் ரூ3,828 கோடி தொகைக்கு சமரசம் செய்துள்ளது. குற்றச்சாட்டு டிக்டாக் மற்றும் அதனை நிர்வகிக்கும் சீனாவில்…

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன்: டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். தென் கரோலினாவின் மிர்டில் பீச்சில் நடைபெற்ற ஒரு பேரணியில் அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். ஈரான் குறித்து…

சீனாவில் தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி!

சீனாவில் 5 வயது சிறுமி 50 கிராம் தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சீனாவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கக் கட்டியை விழுங்கியுள்ளார். உடனே அந்தச்…

மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த தாய்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனையுடன் இரண்டு ஆண்டுகள் கண்காணிப்புப் பிணை…

இலங்கையில் 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவு!

நடப்பாண்டில் இதுவரை 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மொத்த நோயாளர்களில் 52.94 வீதத்துக்கும் அதிகமானோர் மேல்…

ட்ரம்ப் வர்த்தகக் கொள்கைக்கு எதிர்ப்பு ; கார்னியை கடுமையாக சாடிய வேன்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் கனடிய பிரதமர் மார்க் கார்னியை, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய விமானம் ; எட்டு பேர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர். அலாஸ்காவின் தலைநகரான ஆங்கரேஞ்சில் இருந்து, ‘செக்யூரிட்டி ஏவியேஷன்’ நிறுவனத்தின், ‘செஸ்னா 441’ இரட்டை…

களனிப் பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…

வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தில் வெற்றிலை மென்றவர்களுக்கு நடந்த சம்பவம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில்…

இனப்படுகொலை! இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக துருக்கி பிடி உத்தரவு!

இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கி அரசு சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. காஸா மீது கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வந்த போருக்கு எதிராக துருக்கி அதிபர் ரெசெப் தையிப்…

14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை: வவுனியா…

14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை: வவுனியா மேல் நீதிமன்றத் தீர்ப்பு! 14 வயது நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல்…

3 சீனர்களை பிடிக்க பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்

கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல், கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீன நாட்டவர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம்…

மியான்மரில் புத்த மடாலயம் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

நேபிடா, மியான்மரின் மத்திய பகுதியில் உள்ள சாகைங் பிராந்தியத்தில் புத்த மடாலயம் மீது ராணுவ விமானம் நடத்திய வான்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். மியாங் நகரில் இருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்வெல்…