முன்னாள் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

முன்னாள் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில், ஹிஸ்புல்லாவின் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் (Hassan Nasrallah) இறுதிச் சடங்கில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் விமானப்படை நடத்திய விமானத் தாக்குதலில் நஸ்ரல்லா உயிரிழந்தார்.
நான்கு மாதங்களுக்கு பிறகு பாதுகாப்பு காரணங்களால் தாமதமாக இந்த இறுதிச் சடங்கு இன்று நடந்தது.
கருப்பு உடை அணிந்த திரளான மக்கள், ஹிஸ்புல்லா கொடிகளை பிடித்தும், நஸ்ரல்லாவின் படங்களைத் தாங்கியும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் கடுமையான குளிரை மீறி, நடைபயணமாக வந்து நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பெய்ரூட்டின் முக்கிய இடங்களில், நஸ்ரல்லா மற்றும் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசான ஹாஷிம் சாபியுத்தீனின் (Hashem Safieddine) படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இறுதிச் சடங்கில் 65 நாடுகளிலிருந்து 800 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களால், பேருந்து, விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வானில் டிரோன்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு நடைபெறும் முன்னரே, இஸ்ரேல் தனது விமானத் தாக்குதல்களை லெபனானின் தெற்கு பகுதியில் மீண்டும் மேற்கொண்டது.