பேருந்து மோதி வயோதிபர் பலி
இரத்தினபுரி, எஹெலியகொட நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இரத்தினபுரி, எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபர் ஆவார்.
இதனையடுத்து பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.