‘கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்..’: கொலையான சிறுமியின் பெற்றோரிடம் உறுதியளித்த…
சென்னை,
கோவை சூலூரை அடுத்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடைக்கு சென்றபோது மாயமான நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கட்சிகளும் இதற்கு கண்டனம்…
தமிழக கடற்தொழிலாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களால் மீட்பு
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளரை , நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர்
இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபரே மீட்கப்பட்டு , நெடுந்தீவு…
மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டே …
மாகாண சபையை அடுத்த ஆண்டே நடத்த கூடிய சாதகம் காணப்படுவதாக , மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து…
கோவை சிறுமி கொலை: நடந்தது என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்
கோவை,
கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர்…
உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!
உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் நோவோரோசிஸ்க் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் அஸ்ட்ரா செய்தி நிறுவனம்…
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை பாதுகாப்பு சோதனைச்சாவடி அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த…
ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – கடற்தொழில் அமைச்சர்…
“முழு நாடும் ஒன்றாக” என்ற தொனிப்பொருளின் கீழ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழகச் சம்மேளனமும் இணைந்து போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்திருந்தது.
யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய வளாகத்தில் இருந்து ஆரம்பமான…
மேற்காசிய மோதல்; ஈரான் மந்திரி அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை
தெஹ்ரான்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் கடுமையாக தாக்கியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த தாக்குதலில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையிலே அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் ஏமாறாதீர்கள்…
தேசிய மக்கள் சக்தி, இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால், அனைத்து மக்களுக்கும் சமத்துவமான உரிமைகளையும், நீதியையும் பெற்றுக்கொடுப்பதில் உறுதியாக இருக்கின்றது. எனவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என…
விதிமுறைகளை மீறிய மானிப்பாய் பொலிஸார்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் நேற்று சனிக்கிழமை (23) வீதி விதிமுறைகளை மீறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது…
நல்லைக்குமரன் மலருக்கான ஆக்கங்கள் கோரல்
யாழ்.மாநகர சபை சைவ சமய விவகாரக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான நல்லைக் குமரன் 34 ஆவது மலர் வெளியீட்டிற்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆக்கங்களை அனுப்பும் போது,
ஆக்கங்கள் தமிழ் மொழியில் அமைவதுடன். கட்டுரைகள் 5 தொடக்கம் 7 பக்கங்களுக்குள்…
முடிந்தால் பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு வரவழையுங்கள்;விடுக்கப்பட்ட சவால்
முடிந்தால் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு வரவழையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார்.
அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தங்கள்…
வெளிநாடுகளில் பதுங்கிய 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரை கைது செய்வதற்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் விசா இன்றி தங்கும் சலுகை ரத்து
பேங்காக்,
தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சிகாக, இந்தியா உள்பட சுமார் 93 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்குவதற்கான சலுகை வழங்கப்பட்டிருந்தது.…
பாகிஸ்தான் பிரதமர் சீன பயணம்; சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பற்றி ஆலோசனை
கராச்சி
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சீனாவுக்கு வருகை தரும்படி அந்நாட்டு பிரதமர் லி குவியாங் அழைப்பு விடுத்த நிலையில், அதனையேற்று ஷெரீப் இன்று சீனாவின் ஹாங்ஜவ் நகருக்கு புறப்பட்டு சென்றார். அவர், 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான 4…
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் 27,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த நிலையம் இன்று (23) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 6,907 குடும்பங்களைச்…
நாட்டில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை ; மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல்…
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 82 பேர் உயிரிழந்த சோகம்
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கேஸ் வெடிவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யூ நிலக்கரி…
சிறுமி துஷ்பிரயோக வழக்கில் தேரருக்கு எதிராக புதிய தகவல்கள் ; நீதிமன்றத்தில் அதிர்ச்சி…
அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள சிறுமி துஷ்பிரயோக வழக்கில், அவருக்கு எதிராக போதுமான அளவிலான அறிவியல் மற்றும் நேரடி ஆதாரங்கள் இருந்தபோதிலும், பொலிஸார் அநீதியான…
சிவாஜிலிங்கத்தை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வல்வெட்டுத்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேசிய மக்கள் சக்தியின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின்…
அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறும் முறையில் திடீர் மாற்றம்
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு குடியேற்ற விதிகளில் கடும் கெடுபிடி காட்டி வருகிறார். இதனால், இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் விசா நீட்டிப்பு, கிரீன் கார்டு பெறுவது…
ஒரே வாரத்தில் மூன்று மடங்கான பாதிப்பு எண்ணிக்கை… எச்சரிக்கும் உலக சுகாதார முகமை
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள எபோலா பரவல், அந்நாட்டிற்கு மிக அதிக அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என்று உலக சுகாதார முகமை தெரிவித்துள்ளது.
இறப்பு எண்ணிக்கைஎபோலா நோய் பரவல் மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார முகமையின் தலைவர்கள்…
யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை
செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்கிற்கான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரைப் பயணம் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியது.
800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரம், 54 நாட்கள் காடு, மலை, ஆறு, எல்லாவற்றையும் கடந்து…
எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல; அமெரிக்காவை நோஸ்கட் செய்த கிறீன்லாந்து
அமெரிக்காவின் இந்த இணைப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கிறீன்லாந்து (Greenland) அரசாங்கம், "இந்த பிரம்மாண்டமான தீவு எமது மக்களுக்கு மட்டுமே சொந்தமானது, இது ஒருபோதும் விற்பனைக்கு அல்ல" என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கிறீன்லாந்தில்…
ஈரான் போர் விவகாரம்: மகன் திருமணத்தில் கூட பங்கேற்பது கடினமாக உள்ளது – டிரம்ப் வேதனை
வாஷிங்டன்,
டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் (வயது 48). இவரது 2-வது திருமணம், பஹாமாசில் உள்ள ஒரு சிறிய தீவில் நடைபெற உள்ளது.
பாம் பீச் சமூகப் பிரபலமும் மாடலுமான பெட்டினா ஆண்டர்சனை டொனால்ட் டிரம்ப் ஜூனி யர் மணக்க உள்ளார்.…
சமூக ஊடக மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்..! பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரித்துள்ளது.
கணினிகள் அல்லது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி, தனிப்பட்ட…
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு
பெய்ரூட்,
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இருதரப்பு எல்லைகளில் மோதல் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தெற்கு லெபனான் பகுதியில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித்…
கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் சாதனை
காத்மாண்டு,
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், நேபாளம்-திபெத் எல்லை இமயமலையில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது சாதனைப் பயணம் ஆகும். மலையேற்ற சீசன்களில் மலையேற்ற வீரர்கள்…
மரக்கறி சந்தையில் சூதாட்டம் விளையாடிய 10 பேர் கைது
பண்டாரவளை மொத்த மரக்கறி விற்பனை மத்திய நிலையத்தில் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையம் ஒன்றை, பண்டாரவளை குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (23) அதிகாலை முற்றுகையிட்டுள்ளனர்.
பண்டாரவளை பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்த…
எச் 1 பி விசா விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்காவில் நடப்பாண்டில், 'எச் - 1 பி' விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 38.50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக இரண்டாவது…
எபோலா அச்சுறுத்தல்: பிரான்சில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் கனடாவில் தரையிறக்கம்
டொரோண்டோ,
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோவில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் இதுவரை…
கைதாகும் அச்சத்தில் விமல் வீரவன்ச!
இந்த அரசாங்கம் திங்கட்கிழமை தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.
"நான் கீழே விழுந்தது…
நுவரெலியாவில் கடும் மூடுபணி; சாரதிகள் அவதானம்
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் இன்று (23) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபணி நிலவியது குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வீதிகளில் பனிமூட்டம் நிலவியுள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும்…
மட்டக்களப்பில் கசிப்புடன் கைதானவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் இன்று (23) அதிகாலையில் உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த…