பொலிஸாரால் நாளை முதல் விசேட சோதனை !!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் ஒத்துழைப்புடன், எரிபொருளை பதுக்கி வைத்திருக்கும் நபர்கள் மீதான சோதனை நடவடிக்கையை நாளை (22) முதல் பொலிஸார் தீவிரப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சட்டத்தின் பிரகாரம் எரிபொருளை பதுக்கி வைப்பதும், அதனை மீள் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறான குற்றங்களைச் செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் தெரிவித்தார்.