;
Athirady Tamil News

பிரதமர் பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம்!!!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு இடையில் அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிவிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றுவது அத்தியாவசியமானது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி மக்கள் மத்திக்கு சென்று பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக சுயாதீனமாக செயற்படுவது நெறிமுறைக்கு புறம்பானது எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

69 இலட்சம் பெரும்பான்மை மக்கள் இன்னமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாகவும், அவர்களது மௌனம் காரணமாக சிறு குழுவின் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களினாலும் விளம்பரம் கிடைத்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான பல அரசியல் அமைப்புகளினால் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை தூண்டிவிட்டு செயற்படுத்தும் ஒன்று என சுட்டிக்காட்டிய குறித்த பிரதிநிதிகள், இந்த போராட்டத்தில் தீவிரவாத சக்திகள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டை சீர்குலைக்க எதிர்பார்க்கும் வெளிநாட்டு சக்திகள் செயற்படுவதாக கூறப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாட்டை வழிநடத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாவிட்டால் இன்று இவ்வாறான போராட்டங்களை நடத்துவதற்கான சூழல் உருவாகியிருக்காது என்றும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்களுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை!!

’நிதிக் கொள்கையை கடுமையாக்க வேண்டும்’ !!

’நிதிக் கொள்கையை கடுமையாக்க வேண்டும்’ !!

அது இரகசியம் என்கிறார் மைத்திரி !!

ஜனாதிபதி, பிரதமருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரை!!

கடனை மீளச் செலுத்துவதற்காக சீனாவிடம் இருந்து மற்றுமொரு கடன்!!

ராஜபக்‌ஷர்கள் குடும்பமே கூடிப் பேச்சு !!

தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!! (வீடியோ)

அலரிமாளிகைக்கு முன்பாக தொடரும் போராட்டம்!!

’கம்மன்பில கூறியவை பொய்’ !!

அரசாங்கம் பதவி விலக ஒரு வாரம் அவகாசம் !!

இடைக்கால அரசாங்கத்துக்கு தயார்: ​ஜனாதிபதி !!

மஹிந்தவுக்கு எதிராக சத்தியக்கடதாசி: 115 ​பேர் கைச்சாத்திட இணக்கம் !!

அநாமதேயர்களின் போராட்டம்!!

இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் மக்கள் !!

ரம்புக்கனை சம்பவத்துக்கு மஹிந்த தனித்து எதிர்ப்பு !!

“கனவுகளுக்கு இறுதி சவப்பெட்டி ஊர்வலம்” !!

கொழும்பு வீதிகளில் இரும்பு வேலிகள் !!

உனக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை !!

கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை!!

நான் வழமை போன்றே நலத்துடன் இருக்கின்றேன் !!

நாட்டை மீட்கும் பொறுப்பை ஏற்கத் தயார்!!

நானே பிரதமர்: இல்லையேல் இடைக்கால அரசாங்கம் இல்லை !!

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு !!

ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா !!

துப்பாக்கி சூடு நடத்துமாறு அறிவுறுத்தவில்லை: ஐ.ஜி.பி !!

கால எல்லையை நீடித்தது இந்தியா!!

இலங்கைக்கான நாணய பரிமாற்று காலம் நீடிப்பு!!

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் !!

இலங்கை இந்தியா வசமாகுமா?

சபாநாயகர் விசேட அறிவிப்பு!!

தனது சொத்துக்கள் தொடர்பில் நாமல் விசேட அறிவிப்பு!!

இன்னும் 6 மாதங்கள் செல்லலாம்!!!

பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாம்!!!

“கோட்டா கோ ஹோம்” உடனடியாக நிறுத்தவும் !!

மஹிந்தவை அசைக்க முடியாத யோசனை நிறைவேற்றம் !!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கறுப்பு, வெள்ளை கொடிகள் !!

நான் பதவி விலகுவேன்: சஜித் !!

21/4 தாக்குதல்: சபையில் ஒருநிமிடம் அஞ்சலி !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.