;
Athirady Tamil News

இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் யாழ்ப்பாணம் கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும்…

ஒரு கணவன் இரு மனைவிகள்; சடலைத்தை பெற மருத்துவனையில் பெண்கள் குடுமிப் பிடி சண்டை

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் முதன் மனைவியும் , இரண்டாவது மனைவியும் குடுமி பிடி சண்டைப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில்…

அமெரிக்காவில் 1200 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.…

சிறிதரனிடம் பறிக்கப்பட்டு சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட பதவி

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி.நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமிழரசுக்கட்சி தலைமையின் கடிதம் , சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு – திமுகவை கிண்டலடித்த விஜய்

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளார். தவெக 3வது ஆண்டு தொடக்க விழா தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3வது ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்…

ரூ.200 லட்சம் கோடியை தாண்டிய இந்தியாவின் கடன் – அதற்கு வட்டி மட்டும் இத்தனை கோடியா?

இந்தியாவின் கடன் ரூ.200 லட்சம் கோடியை தாண்டியுள்ள நிலையில், அதில் வட்டிக்காக எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதை பார்க்கலாம். இந்தியாவின் கடனுக்கான வட்டி 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர்…

ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் ஜாமினில் விடுதலை

மேற்காசிய நாடான ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் வெகுண்டெழுந்த மக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்…

ஷிரந்தி ராஜபக்ஷவிடம் 4 மணித்தியாலங்களுக்கும் மேல் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள்…

கிவுல் ஓயா திட்டம்: சிங்கள குடியேற்றம் அல்ல, தமிழ் மக்களுக்கே முன்னுரிமை – அமைச்சர்…

கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர் இ.சந்திரசேகர் கூறியுள்ளார். கடந்தகாலத்தில் மகாவலி அதிகாரசபை ஊடாக சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றது உண்மைதான், ஆகவே…

இரு வங்கி கணக்கு வைத்திருந்தவர் கைது

சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு வங்கிக் கணக்குகளைப் பேணி வந்த நபர் ஒருவரை, பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நிதி…

யாழில் நீதிமன்ற உத்தரவால் கடும்கோபம்; பொலிஸாரை செருப்பால் அடித்த பெண்!

யாழில் தன்னிடம் இருந்த எட்டு வயதுக் குழந்தையைத் தனது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஆத்திரமடைந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரி மீது தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை…

கோஸ்டா ரிகா அதிபா் தோ்தல்: ஆளுங்கட்சி வேட்பாளா் வெற்றி

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், ஆளுங்கட்சி வேட்பாளா் லாரா ஃபொ்னாண்டஸ் 48.9 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளாா். அந்நாட்டு சட்டப்படி, ஒரு அதிபா் வேட்பாளா் முதல் சுற்றிலேயே வெற்றி பெற 40 சதவீத…

யாழ். போதனா வைத்தியசாலையில் 11 வயதுச் சிறுவன் பலி: பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும்…

வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கு நீர்த் தன்மை குறைவடைந்து, கிருமித்தொற்று ஏற்பட்டதே காரணம் என பிரதேச பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது. இருபாலை வீதி – கோண்டாவில் கிழக்கை…

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

திஸ்பூர், அசாமின் உதல்குரி பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 5.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.80…

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

பன்னாட்டு நிறுவனங்களின் அண்மைக் கால நடவடிக்கைகளை நன்கு ஆராயும்போது, ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு எனும் ‘ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் (ஏஐ)’ தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியால், பணியாளர்கள் பெரும் எண்ணிக்கையில்…

புதிதாக பதவியேற்ற யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக 27.01.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (03.02.2026) காலை 09.00 மணிக்கு…

சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு ஆயுள் சிறை: ஊழல் வழக்கில் தண்டனை

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வருவாய்க்கு அதிகமாக சொத்து சோ்த்தது தொடா்பான வழக்கில், சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சா் டாங் யிஜுனுக்கு (64) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 முதல் 2023 வரை சீனாவின் நீதித்துறை அமைச்சராகப்…

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர்…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில்  திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு…

தாயும் மகனும் விசாரணைக்கு அழைப்பு; மனைவியுடன் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக…

திருப்பரங்குன்றம் விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ஆட்சியர்

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம…

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் ஆட்சேபனை!

தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது. புத்த மதத்தின் தலைமைப் பதவிகளுள் முக்கியமான தலாய் லாமாவாகவிருக்கும் ‘டென்ஸின் க்யாட்சோ (90)’ மீது சீனா தொடர்ந்து அதிருப்தி…

சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

நாட்டின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் 49 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு…

அமெரிக்காவில் நிதி நெருக்கடி ; இலங்கையிலுள்ள தூதரகத்தின் பேஸ்புக் பதிவுகள் முடக்கம்

அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம் (Government Shutdown) ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாடுகளிலும் எதிரொலிக்கத்…

இந்தியா மீதான வரி 18%ஆக குறைப்பு ; டிரம்பின் அதிர்ச்சி அறிவிப்பு

இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிக்கையில் டிரம்ப் கூறியிருப்பதாவது, "இந்தியாவின் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய பிரதமர் மோடி, எனது சிறந்த நண்பர்களில்…

யாழ் பாடசாலையில் சர்ச்சை ; ஒரு தசாப்தமாக வரலாறு பாட ஆசிரியர் இல்லை

யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த 10 வருடங்களாக வரலாற்று பாடத்திற்கான ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இந்த…

திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

பதுளையில் இருந்து நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது. மேலதிக விசாரணை குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் சென் ஜேம்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தீயில் எவருக்கும் எந்த சேதமும்…

அனைத்து மின் விளக்குகளும் அணைந்த தருணம் ; கிளிநொச்சி நீதிமன்றத்தில் மரண தண்டனை

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால், கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு இன்று (02-02-2026) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவம் நடத்திய நடவடிக்கையில் கடந்த 40 மணி நேரத்தில் 145 கிளா்ச்சியாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் ராணுவ…

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள தனியார் விண்ணப்பத்தாரர்கள், தமது அனுமதி அட்டைகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்வதற்கான கால அவகாசம் குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வங்கதேசத்தில் பூதாகரமாக வெடித்து ஆட்சி மாற்றத்தை விளைவித்த மாணவா்கள்…

உக்ரைனில் ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 12 பேர் பலி

கீவ், உக்ரைனின் நிப்ரோ நகரில் நேற்று ரஷிய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது குண்டு பாய்ந்ததில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். உக்ரைனின்…

இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 4 நாடுகள்.., எது எது தெரியுமா?

சர்வதேச பயணம் திட்டம் செய்யும்போது, நம் மனதில் வரும் முதல் யோசனை விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தான். இருப்பினும், பல நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவைப்படுவதில்லை. பயணிகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மட்டும்…

ரஷ்ய பெண்களுடன் உடலுறவு கொண்டார் ; பில் கேட்ஸ் குறித்து எப்ஸ்டீன் அதிர்ச்சி தகவல்

அமெரிக்க நீதித் துறை சமீபத்தில் வெளியிட்ட, 'எப்ஸ்டீன் கோப்புகளில்' மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பில் கேட்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரி எப்ஸ்டீன்,…