;
Athirady Tamil News

மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும் !!

0

ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க கோருவோம். 225 எம்பீகளில் மனசாட்சிபடி வாக்களிக்கும் எம்பீகள் யார், மனசாட்சியை மறந்துவிட்டு வாக்களிப்பவர்கள் யார் என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்களும், வெளியே போராடும் மக்களும் அறிந்துகொள்ளலாம்.

முதலில் இவரது அதிகாரங்களை பிடுங்க வேண்டும். அதைவிடுத்து இவருக்கு கீழே “காபந்து” அரசு அமைத்தால், அது “கால்பந்து” அரசாகவே அமையும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, நம்பிக்கை இல்லா பிரேரணையை விட இதுதான் ஜனாதிபதியை நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப கோரும் கோஷத்தின் அடிப்படை இதுதான். எமது கட்சி உட்பட, இந்நாட்டில் எதிரணி அரசியல் கட்சிகள் கோருவது இதைதான். சமூக சிவில் அமைப்புகள் கோருவது இதைதான். வெளியே தெருக்களில் போராடும் மக்கள் கோருவதும் இதைதான்.

நம்பிக்கை இல்லா பிரேரணையையிலும் கையெழுத்திடுவோம். அதையும் கொண்டு வருவோம். ஆனால், அதைவிட 21ம் திருத்தத்தை கொண்டு பிரதானமாக கொண்டு வருவோம்.

நம்பிக்கை இல்லா பிரேரணை என்பது ஜனாதிபதியின் அரசாங்கத்துக்கு எதிரானது. அது வெற்றி பெற்றால், புதிய அமைச்சரவை இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவின் கீழேயே அமைய வேண்டும். அதை செய்ய முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது.

ஏனெனில், ஜனாதிபதியின் சொந்த பொதுஜன முன்னணி கட்சி அமைச்சரவையே இவருக்கு கீழே செயற்பட முடியாவிட்டால், எதிரணியும் பங்கு பற்றும் காபந்து அரசாங்கம் எப்படி இவருக்கு கீழே செயற்பட முடியும்? அப்படியானால், அது “காபந்து” அரசாங்கமாக இருக்காது, “கால்பந்து” அரசாங்கமாகவே இருக்கும்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை, ஆதரிக்காமல், தமது மனசாட்சியை மறந்துவிட்டு பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்கும் எம்பீகளை அவர்களுக்கு வாக்களித்த மக்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம். வெளியே போராடும் மக்களும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச பதவி விலகி வீட்டுக்கு போக வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கோரிக்கை. ஆகவே அவர் வீட்டுக்கு போகும் போது, 21ம் திருத்தத்தை, தமது மனசாட்சியை மறந்துவிட்டு எதிர்த்து வாக்களிக்கும் எம்பீகளையும் அவருடன் துணைக்கு அனுப்பி வைக்கலாம்.

பிரதமர் மஹிந்த இன்றிரவு விசேட உரை?

காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’ !!

மஹிந்தவை நீக்கவும்; மைத்திரி !!

கோட்டாவுக்கு முன்னர் மைத்திரியை சந்தித்த சஜித் !!

ரணிலுக்கு முக்கிய பொறுப்பு? இன்றிரவு திடீர் திருப்பம்!!

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் புதிய தகவல் !!

கோல்​பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !!

அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!

மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !!

போராட்டத்தில் குதிக்கும் எண்ணம் வந்துவிட்டது !!

நள்ளிரவு கடந்தும் ஆர்ப்பாட்டம் !!

போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்)

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!

காலி முகத்திடலில் ஜேம்மர்: போராட்டக்காரர்கள் அந்தரிப்பு !!

உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா !!

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்!!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை!!

பொலிஸாருக்கு ரோஜா கொடுத்த ஆர்ப்பாட்டக்காரி !!

நிதியமைச்சர் யார்? அதிரடி அறிவிப்பு வெளியானது !!

சபாநாயகர் அதிரடி: 2 எம்.பிக்களை தூக்கினார் !!

நம்பிக்கை பிரேரணையை கொண்டு வாருங்கள் !!

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

கோட்டாபய -ரணில் சந்தித்துப் பேச்சு !!

“இலங்கை கொதிக்கின்றது” ஜெசிந்தா ஆர்டெர்ன் !!

கணவன், மனைவி கதைச்சொன்னார் ​​​ஏரான் !!

இலங்கை பயணம் செய்யவுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான அறிவிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.