’அரசியல் ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்’ !!

பொருளாதாரம் மற்றும் அரசியல் முறைமைகளில் முழு அளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமுறையை இல்லாதொழிப்பதா இல்லையா என்பதற்கு முன்னதாக அரசியல் ரீதியான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வேண்டும் எனவும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களை எவ்வாறு உள்வாங்குவது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.