தினேஷ் குணவர்தன பதில் பிரதமராகவேண்டும் – ஜயகொடி !!

அரசியலமைப்பின்படி பதில் பிரதமராக சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
அத்துடன், எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.