;
Athirady Tamil News

கோட்டாபயவின் கையெழுத்தின்றி இணையங்களில் பகிரப்படும் பதவி விலகல் கடிதம்!!

0

கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் என தெரிவிக்கப்படும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோட்டாபய ராஜபக்சவின் பெயருள்ள இடத்தில் கையெழுத்திடப்படாத கடிதமொன்றே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.

குறித்த பதவி விலகல் கடிதத்தில் நேற்றைய தினத்திற்கான திகதி இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகரின் கருத்து

என்ற போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

என்ற போதும் புதன்கிழமை அதாவது நேற்றைய தினம் நள்ளிரவிற்கு முன்னர் தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக தனக்கு அறிவித்திருந்ததாக சபாநாயகர் ஏகனவே குறிப்பிட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் இந்த கடிதம் தொடர்பாகவோ அல்லது கோட்டாபயவின் பதவில் விலகல் தொடர்பாகவோ சபாநாயகர் இன்றைய தினம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே இந்த கடிதம் போலியானதாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் தமது கருத்தை பதிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.