சபாநாயகரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (16) காலை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது தற்போதைய முக்கியமான தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் பாராளுமன்றத்தின் பங்கை இந்திய உயர்ஸ்தானிகர் பாராட்டினார்.
இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகரிடம் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”