புதிய பிரதமர் சஜித்?: ரஞ்சித் விளக்க அறிக்கை !!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி போலியானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.” ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகப்பூர்வ கடித உரையில், ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் சமூக ஊடகங்களில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.