பாதுகாப்பு செயலாளரின் கோரிக்கை!!

நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனியார் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதனை தவிர்க்குமாறும் அவர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.