;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. டிரம்பின் மருத்துவ அறிக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் மேரிலாந்தின் வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவமனையில் சுகாதார உடல் பரிசோதனையை…

தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டி ; தங்க பதக்கம் வென்ற மாணவன்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மன்னார் முருங்கன் மத்திய மகா வித்தியாலய மாணவன் கமில்டன் தங்கம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.​ அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர்…

கொழும்பில் மின்சாரம் தாக்கி 55 வயது குடும்பஸ்தர் பலி

கொழும்பு வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலை இவ்வாறு சடலம் கரையொதுங்கியுள்ளது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி…

அமெரிக்க ஆயுத ஆலையில் வெடிவிபத்து: 19 போ் மாயம்

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 போ் மாயமாகினா்; அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘டென்னசியின் கிராமப்புறத்தில் உள்ள…

காசா போர் நிறுத்தம்; ட்ரம்பிடம் பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. விரைவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.…

மருத்துவ மாணவியை கூட்டாக சீரழித்த கும்பல் ; மீண்டும் அரங்கேறிய கொடூரம்

மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவி பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டுள்ளார். குறித்த மருத்துவமனையில் ஒடிசா மாநிலம் ஜலேஸ்வரை சேர்ந்த மாணவி 2ஆம் ஆண்டு படித்து…

ஹோட்டல் அறையில் இருந்த பணம் மாயம் ; வெளிநாட்டு பெண் அதிர்ச்சி!

சிகீரியாவில் ஹோட்டல் அறையில் இருந்து 950 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை திருடிய ஹோட்டல் ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிகீரியா ஹோட்டலில் பணிபுரியும் 21 வயதான ஊழியரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயது நேபாள…

கொழும்பில் உணவகம் ஒன்றில் தீ விபத்து

கிருலப்பனை பகுதியிலுள்ள உணவகமொன்றில் இன்று (12) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

போர் நிறுத்தத்தை தொடர்ந்து வீடுகளுக்கு திரும்பும் காசா மக்கள்

போர் நிறுத்ததை தொடர்ந்து போரினால் இருப்பிடத்தை இழந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் முதற்கட்ட உடன்பாடு நடப்புக்கு வந்துள்ளது. அது பல…

மெக்சிகோவில் ரேமண்ட் புயலால் 28 பேர் உயிரிழப்பு

வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயலால் மெக்சிகோவில் கனமழை பெய்து வருவதால் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டின் 32 மாகாணங்களிலும் கனமழை…

பாதுகாப்பு வாகனங்களை மீளவும் கோரும் மஹிந்தவும் மைத்திரியும்

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்திடம் ஒப்படைத்த அவர்களது பாதுகாப்பு வாகனங்களை மீளக் கோரியுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு…

ஒன்பது நாட்களில் 46,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 46,868 ஐத் தாண்டியுள்ளது. ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மொத்தம் 14,221 இந்தியர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இது சுற்றுலாப்…

புதிய அமைச்சர்களின் அமைச்சுகளை குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி

அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்தின் படி புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க நேற்று (11) அதற்கான…

யாழ். மாநகரசபையால் வீதிகள் புனரமைப்பு!_முதல்வர் திருமதி வி.மதிவதனி ஆரம்பித்து வைத்தார்.

யாழ். மாநகரசபையின் 02ஆம் வட்டாரம் கலட்டி அம்மன் வீதி வேலைகளை யாழ்,மாநகரசபை முதல்வர் திருமதி வி.மதிவதனி அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். 02ஆம் வட்டாரத்தின் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்…

காதலனை விட்டு வரமறுத்த 3 பிள்ளைகளின் தாய்; கணவன் செய்த கொடூரம்

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் தனது மூன்று குழந்தைகளை கொலை செய்து பொலிஸில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை…

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்து; மூவர் பலி

ஆஸ்திரேலியாவின் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்க்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ரக…

பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடை! தலிபான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு சர்ச்சை!!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியா வந்திருக்கும் நிலையில், புது தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் ஊடகவியலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது…

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது குறித்து, வெள்ளிக்கிழமை மாலை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விருது வென்ற மரியா கொரினா மச்சாடோ, என்னைத் தொடர்புகொண்டு, அந்த விருதுக்கு நான்தான் உரியவன் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.…

யாழில் கிணற்றில் தவறி விழுந்த குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த கதி

கிணற்றில் தவறி விழுந்த வயோதிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கிணற்றில் இருந்து…

இலங்கையில் இளைஞனை கொலை செய்த சாரதி ; 32 ஆண்டுகளின் பின் கைதான சந்தேக நபர்

கொனவல பகுதியிலுள்ள ஒரு இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்துக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கொலைச் சம்பவம் இடம்பெற்று சுமார் 32 வருடங்களின் பின் இச் சந்தேக நபர், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது…

யாழில். இணைய வர்த்தகத்தில் பெரும் நஷ்டமடைந்த இளைஞன் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இணைய (Cryptocurrency) வர்த்தகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தால் , அவ்விளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளான். யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியை சேர்ந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது…

08 வருடமாக சாமியார் வேடத்தில் இருந்தவர் கைது

மட்டக்களப்பில் 05 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு , யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்தில் சாமியார் வேடத்தில் திரிந்த 51 வயதான நபர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் அல்லது விரைவில் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா். சீனாவில் வெட்டி எடுக்கப்படும் அரிய…

தங்கம் வாங்க தாய்லாந்து, வியட்நாமில் கியூவில் நிற்கும் மக்கள்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், சில நாடுகளில் மக்கள் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் உள்ள நகையங்களுக்கு…

‘எங்களுடன் விளையாட வேண்டாம்’..! பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தான் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர்…

ஜப்பானின் நீண்டகால ஆளுங்கட்சி கூட்டணியில் பிளவு

ஜப்பானில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைமையிலான ஆளும் கட்சிக் கூட்டணியில் 26 ஆண்டுகளாக அங்கம் வகித்த கொமேய்டோ கட்சி, அதில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, எல்டிபி கட்சித் தலைவராக கடந்த வாரம்…

போதாக்குறைக்கு பாலியல் பிரச்சினைகளுமா?

எம்.எஸ்.எம்.ஐயூப் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அநாவசியமாக சிக்கிக்கொண்ட ஒரு பிரச்சினையைப் பற்றி நாம் கடந்த வாரம் மேலோட்டமாக குறிப்பிட்டு இருந்தோம். அதாவது ஓரினச் சேர்க்கைப் போக்கு போன்ற பாலியல் நடைமுறையில் மாற்றமாக நடந்து கொள்வோரை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடுவதற்கு 0112882228 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில்…

முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா

பிரித்தானியாவும் பிரான்சும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் செய்துகொண்டுள்ள One in, one out திட்டத்தின் கீழ், முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது பிரித்தானியா. One In, One Out…

இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவிய இந்திய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை…

ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவி

76வது இராணுவ தினத்தை முன்னிட்டு, ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ ஆகியோரால் இந்தப்…

வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில்…