;
Athirady Tamil News

அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷே பதவி விலகனும்.. இலங்கை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!! (வீடியோ படங்கள்)

0

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராடி வரும் மக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றி நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷே பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியானது.

பொருளாதார கொள்கை

இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.

வன்முறை

இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவானார்.

விக்ரமசிங்கே

பொதுமக்கள் ராஜபக்‌ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது கட்சி அமைச்சர்களின் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்று இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியையும், வன்முறை சம்பவங்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கோ கோட்டா

இருப்பினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்தது. அதேபோல் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து வந்தன. இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த நீச்சல் குளம், படுக்கை அறை, சமையல் சூடம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மகிழும் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகின. பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றப்போவதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட கோட்டாபய ராஜபக்‌ஷே அங்கிருந்து தப்பி ஓடினார்.

பிரதமர் ரணில் ராஜினாமா

இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகவும் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அனைத்துக் கட்சியினருடன் அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்து இருக்கிறார்.

கோட்டாபய ராஜினாமா செய்வாரா?

இலங்கையின் அசாதாரண சூழல் குறித்து அனைத்துக் கட்சிகள் அவசர கூட்டம் நடத்தின. சபாநாயகர் மகிந்த யபா அபேவர்தேனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெருவாரியான தலைவர்களின் பரிந்துரைபடி பிரதமர் ரணில் பதவி விலகி இருக்கிறார். அதேபோல் கோட்டாபய ராஜபக்‌ஷேவும் பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே ரணிலைபோல் கோட்டாபயவும் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதிபர் மாளிகை மட்டுமில்ல.. ஊடகங்களுக்கும் குறி! அட்டாக் மோடில் இலங்கை மக்கள்!! (வீடியோ, படங்கள்)

கோட்டாவுக்கு 24 மணி நேரம் காலக்கெடு !! (வீடியோ)

பிரதமர் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!!! (வீடியோ)

பந்துல குணவர்தன இராஜினாமா !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையில் இராப்போசனம்!! (வீடியோ)

பிரதமர் ரணில் பதவி விலக தயார்!! (வீடியோ)

அடுத்த ஜனாதிபதி யார் தெரியுமா? (வீடியோ)

நாடே கொந்தளிப்பு.. இலங்கை-ஆஸி டெஸ்ட் போட்டி.. மைதானத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் – பதற்றம்! (வீடியோ படங்கள்)

போராட்டத்துக்குப் போன இடத்தில் ‘நீராடல்’.. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!! (வீடியோ படங்கள்)

“போராட்டம் கையை மீறி செல்லும்..” எச்சரித்த உளவுத்துறை! நள்ளிரவில் எஸ்கேப் ஆன கோட்டாபய ராஜபக்ச!! (வீடியோ படங்கள்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)

42 பேர் காயம்: மூவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

முக்கியஸ்தர்களுடன் இரண்டு கப்பல்கள் பறந்தன!! (வீடியோ)

​அவசர அழைப்பு விடுத்தார் பிரதமர் ரணில் !! (வீடியோ, படங்கள்)

இருவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

கோட்டா தப்பியோட்டமா? (வீடியோ)

கோட்டா தப்பியோட்டம்: கண்டியில் தேடுதல் !!! (வீடியோ)

போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)

அவசர செய்தி: 23 பேர் காயம்!! (வீடியோ)

கோட்டையில் துப்பாக்கிச் சூடு !!

ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் !! (வீடியோ)

கொழும்பில் பதற்றம் பலர் காயம் !!

தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)

போராட்டங்களை நிதானமாக கையாள வேண்டும்: ஐ.நா. !!

காலிமுகத்திடலில் பொலிஸார் குவிப்பு !!

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல் !!

ஊரடங்கை மீளப்பெறுக: மனித உரிமை ஆணைக்குழு !!!

வழமைபோன்று இ.போ.ச பஸ் சேவைகள் !!

புகையிரத சேவை இடைநிறுத்தம் !!

சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படமாட்டாது!!

பொலிஸ் ஊரடங்கு என ஒன்று சட்டத்தில் இல்லை – சுமந்திரன்!!

நாளை டேட்டா சேவைகள் முடங்கலாம்?

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் !!

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.