பிரதான எதிர்க்கட்சி பிரதமரிடம் கோரிக்கை !!

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்வரும் திங்கட்கிழமை (25) பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோட்டாகோகமவில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விவாதம் நடத்துவதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு சர்வதேச சமூகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் இது தற்போதைய பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு திட்டமிட்டபடி எதிர்வரும் 27ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.