;
Athirady Tamil News

உலகவங்கி குழுவினால் தயாரிக்கப்பட்ட “OFFSHORE WIND ROADMAP FOR SRI LANKA” மோசடி நிகழ்ச்சி நிரலே!! (PHOTOS, VIDEOS)

0

‘தேசிய அரச சாரா நிறுவனம் என்ற போர்வையில் உள்ளெடுக்கப்பட்ட தனியார் கம்பனிகள்’ மோசடி நிகழ்ச்சி நிரலே

உலக வங்கி குழுவினால் தயாரிக்கப்பட்ட Offshore Wind Development Program “OFFSHORE WIND ROADMAP FOR SRI LANKA” என்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் துஷ்யந்தன் உலகநாதன் தெரிவித்திருந்தார்.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஊடாக(renewable energy) காற்றினை பயன்படுத்தி மின்சார உற்பத்தினையினைப் பெறல் என்ற திட்டத்திற்காக உலகவங்கி முழுவினால் நிதியளிக்கப்பட்டு ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக வெளியீடு செய்யப்பட்ட “OFFSHORE WIND ROADMAP FOR SRI LANKA” ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் பதிப்புரிமையினை உலகவங்கி மற்றும் International Bank for Reconstruction and Development கொண்டுள்ளது.

இவ் ஆவணத்தில் மேலும் சில விடயங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்; இந்த வேலையில் வெளிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகள், விளக்கங்கள் மற்றும் முடிவுகள் உலக வங்கி, அதன் நிர்வாக இயக்குநர்கள் அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கங்களின் கருத்துகளை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், இந்த வேலையில் சேர்க்கப்பட்டுள்ள தரவுகளின் துல்லியத்திற்கு உலக வங்கி உத்தரவாதம் அளிக்கவில்லை எனவும், இங்குள்ள எதுவும் சலுகைகள் மற்றும் விலக்குகள் மீதான வரம்பாகவோ அல்லது தள்ளுபடியாகவோ கருதப்படாது. இவை அனைத்தும் குறிப்பாக ஒதுக்கப்பட்டவை. என உலக வங்கி மற்றும் International Bank for Reconstruction and Development குறித்த “OFFSHORE WIND ROADMAP FOR SRI LANKA” ஆவணத்தில் பதிப்புரிமைக்கு கீழ் தெருவித்த கருத்துகளாகும்.

மேலும் குறித்த ஆவணமானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) பயன்படுத்தி நாட்டின் பொருளாதார ஸ்திரமற்ற தன்மையினை குறைப்பதற்கு உலக வங்கியினால் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் பல அமசங்களைக் கொண்ட பரிந்துரைகளுடன் வழங்கப்பட்டது.


இதில் பக்கம் 169 இல் குறிப்பிடப்பட்டுள்ள பங்குதாரர்கள் என்ற அட்டவணையானது தேசிய அரச சாரா நிறுவனங்கள் அல்லது அமைப்புக்கள் என்ற விடயத்திற்கு கீழ் பல தனியார் கம்பனிகளையே குறித்திருந்ததுடன் இவைகளை எவ்வாறு அரச சாரா அமைப்புக்கள் [National non-governmental organizations (NGOs)] என குறிப்பிட முடியும் என்ற சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாயையினை தோற்றுவித்துள்ளார்கள். சர்வதேசம் மீதான மக்கள் நம்பிக்கை இன்று அற்றநிலையில் காணப்படுகின்றதுடன், இவ்வாறான ஆவணப்படுத்தல்களில் முறையற்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளமை [பிழையான ஆவணப்படுத்தல்கள்] தேசிய அரச சாரா நிறுவனங்களின் [National non-governmental organizations (NGOs)] நன்மதிப்பினை கேவலப்படுத்தும் செயலாகவே நாம் பார்க்கின்றோம். உலக வங்கிக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்ததுடன்; மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த மின் உற்பத்தி செயற்பாடுகள் இந்திய இலங்கை அரசு மேற்கொள்வதாக காட்டப்பட்டுள்ளது இவ்விடயம் தொடர்பாக 2022 இல் கொழும்பிலும் நாட்டின் ஏனையபகுதிகளிலும் மன்னார் மாவட்டத்திலும் மக்கள் தமது எதிர்பினைத் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் கடந்தமாதம் ஒகஸ்ட் உலகவங்கி ஆவணத்தினால் மீண்டும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களாகிய நாம் நாட்டின் இறையான்மைக்கு பங்கம் விளைவிக்கும் திட்டங்களை எதிர்கின்றோம். இவை இந்திய தனியார் கம்பனிகளுக்கு வழங்குவதற்கு தன்னிச்சையான செயற்பாடுகளை அரசியல்வாதிகள் மேற்கொள்கின்றனர். மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதியில் இவ் செயற்பாடுகளை மேற்கொள்வதனால் தீவு பேராபத்தினை எதிர்கொண்டுள்ளது. 2021 தொடக்கம் மன்னார் மாவட்ட மக்கள் தொடச்சியாக எதிர்பினை தெருவித்துக் கொண்டிருக்கின்றனர். இன்றும் மன்னார் மாவட்டத்தில் நறுவிலிக்குளம் 15MW காற்றாலை மின் உற்பத்தி செயற்பாட்டினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் குடியிருப்புப் பகுதியில் குறித்த காற்றாலைகள் சில நிறுவப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான தீர்வுகளை வழங்கப்படாமல் உள்ளமையும் மக்கள் மீது குற்றம் சுமத்தும் நடவடிக்கைகளே தொடர்சியாகவுள்ளது. இது தொடர்பாக நாம் அவதானத்துடன் உள்ளோம். இது சுற்றுச்சூழல் ஆய்வினை கவனத்தில் கொள்ளாது நடைபெற்றதா? என்ற கேள்வி எம்மிடமுள்ளது. நாம் இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் நேரடியாக கலந்துரையாடவுள்ளோம்.

குறிப்பாக இந்திய இலங்கை நாட்டுக்கிடையிலான இராஜதந்திர செயற்பாடுகள் கடன்பொறிமுறைகள் தூதரக நன்கொடை மற்றும் மானியங்கள் முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பாலம் அமைப்பது இயற்கை கடல்வளங்களையும், பாறைகளையும் சூழலினை அழிக்கும் செயல்; இலங்கையில் உள்ள உள்ளுர் முயற்சியாளர்களினை அழிப்பதற்கும், சமூகப், பொருளாதார, அரசியல் கட்டமைப்பு சேதத்தினையும் ஏற்படுத்தும் இவ்விடயங்களையும் நாம் எதிர்க்கின்றோம்.

புதிதாக வரவுள்ள இந்திய தனியார் கம்பனி இதனை இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடக்கவுள்ளதாக மாயையினை தோற்றுவித்துள்ளார்கள். தனியார் கம்பனிகள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயம் சிக்கலுக்குரியது உதாரணமாக தகவல் அறியும் சட்டம் கூட பயன்படுத்த முடியாது. மிகமிக சட்டச்சிக்கலிற்குள் மக்களினையும் நாட்டினையும் அரசியல்வாதிகள் தள்ளுவதை நிறுத்தல் வேண்டும் எனவும், மக்கள் குறித்த விடயங்கள் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்ச்சையினை உருவாக்கியுள்ள Sri Lanka Offshore Wind Roadmap ஆவணம்; National NGO’S களுக்கு தொடர்பா? (PHOTOS, VIDEOS)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமும் காற்றாலை திட்டமும்!! (கட்டுரை)

மன்னாரில் காற்றாலைகள் செயற்றிட்டங்களால் அழியும் தருவாயில் சுற்றுலாத்துறை?!! (PHOTOS)

இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? 24.08.2023 நடந்தது என்ன? (PHOTOS, VIDEOS)

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)

காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்துவார்களா? !! (PHOTOS)

மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras Power Private LTD கம்பனிக்கு கடிதம்.!! (PHOTOS, VIDEOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.