நன்றி தெரிவித்தார் டலஸ் அழகப்பெரும !!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயரை பரிந்துரை செய்தமைக்கு டலஸ் அழகப்பெரும நன்றி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதேவேளை இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்தார்.
இதனைத்தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் வழிமொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.