பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

நாட்டின் பொருளாதார நெருக்கடியை விரைவாக தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான தீர்மானங்களை முன்னெடுத்து அதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால நாடு மேலும் மோசமான பொருளாதா படுகுழிக்குள் விழும் என இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இப்போதுள்ள நிலையில் சில கடுமையான தீர்மானங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எம்மால் மீள முடியும் எனவும், நாடு ஒரு நோயாளியாக மாறியுள்ள நிலையில் வலியுடன் கூடிய சிகிச்சை மூலமாக மட்டுமே அதனை குணப்படுத்த முடியும். எனவே ஜனாதிபதி சில கடுமையான தீர்மானங்களை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடவேண்டும்,எம்மிடம் அந்நிய செலாவணி இல்லை. ஆகவே சர்வதேச நாணய நித்தியத்திடம் சென்றால் எங்களிற்கு நற்சாட்சி பத்திரத்தை தரும்,உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடமிருந்து நிதி உதவியை கொண்டுவரும்,பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகள் கிடைப்பதற்கும் அது வழிவகுக்கும். கடன் கொடுப்பனவாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் நாங்கள் எங்கள் கடன்மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.