கொள்ளுபிட்டிய, காலி முகத்திடல் தாக்குதல் – நீதிமன்றத்தின் உத்தரவு!!

பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க மற்றும் 11 சந்தேகநபர்களும் ஜூன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த பணிப்புரைக்கமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து சட்டமா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்திருந்தார்.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக்க மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்திருந்து.