தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்!! (வீடியோ)

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேர வாவிக்கு அருகில் ஒரு குழுவினரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேசபந்து தென்னகோனின் வாகனமும் கும்பலால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.