ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக சஜித் அறிவிப்பு!!

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று (15) கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.