;
Athirady Tamil News

36 சிறுவர்கள் கட்டாயப்படுத்தி துஸ்பிரயோகம்; விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

கண்டியில் சிறுவர்களை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது. கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும்…

அம்புலுவாவ செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!

கம்பளை - அம்புலுவாவ பகுதியில் அமைக்கப்பட்டு வந்த கேபிள் கார் (Cable Car) திட்டத்தினால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டால், அதனை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி

ஜப்பானில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு; 35 பேர் பலி

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5 அடி வரை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானின் நீகாட்டா…

ஒரே நாளில் புதினுடனும் டிரம்ப்புடனும் பேசிய சீன அதிபர்!

சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் காணொலி மூலம் பேசியுள்ளார். இதில், உலகளவில் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில் நிலையான கூட்டு ஒத்துழைப்பு கொண்டுள்ளதைக்குறித்துப் பேசியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர்…

பரீட்சை எழுத காத்திருந்த மாணவி கோடரி தாக்குதலில் பலி

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தம்பால பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், வீட்டிற்குள் கோடரியால் தாக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்ததாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுத எதிர்பார்த்திருந்த தம்பல…

புலிக்குட்டியை பயத்தில் உறைய விட்ட நாய்கள் ; பீதியில் மரத்தில் குடியேறிய புலி

பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியொன்றில் நாய்கள் கூட்டமாக சிறுத்தைக் குட்டியொன்றைத் துரத்திய வேளையில், அந்த சிறுத்தைக் குட்டி பயத்தில் அருகில் இருந்த மரத்தில் ஏறிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.…

மூடுப்படும் அபாயத்தில் 1,500 பாடசாலைகள் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால், மலையக மாணவர்களின் இலவச கல்வி உரிமை பாதிக்கப்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நுவரெலியாவில் நேற்று (04)…

யாழில் இளைஞர், யுவதிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்து ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் நேற்று (04)தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீரிழிவு தாக்கம்…

அணுசக்திக் குறைப்புக்கு ஈரான் அமெரிக்கா நேரடிப் பேச்சு – ஓமனில் நாளை சந்திப்பு

அணுசக்திக் குறைப்பு தொடா்பாக ஈரான்-அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவாா்த்தை, ஓமன் நாட்டில் வெள்ளிக்கிழமை(பிப். 6) நடைபெறவுள்ளது. இப்பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா தரப்பில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், சிறப்புத் தூதா்…

கிரீஸ் கடற்படை கப்பல் – அகதிகள் படகு மோதல்: 15 போ் உயிரிழப்பு

கிரீஸிஸ் சியோஸ் தீவு அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டுக் கடற்படை கப்பல் மீது அகதிகள் வந்த படகு மோதியதில், பெண்கள் உள்பட 15 போ் உயிரிழந்தனா். துருக்கியிலிருந்து கிரீஸ் நோக்கி வந்த அகதிகள் படகு…

அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாராகும் ஈரான்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போா் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் நோ்மையான மற்றும் கண்ணியமான முறையில் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் முன்வந்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகளைத் தொடங்குமாறு ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு…

பயங்கரவாதத்துக்கு எதிராக ‘சமரசமற்ற’ நடவடிக்கை- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீா்மானம்

பாகிஸ்தானில் பெருகி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒடுக்க, நாடு தழுவிய அளவில் சமரசமின்றி கடும் நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. அண்மையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 200-க்கும் மேற்பட்டோா்…

உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: பேச்சுவார்த்தைக்கு முன் பதற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை (பிப். 4) முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில், உக்ரைன் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே இரவில் சுமார் 450 ட்ரோன்கள், 70 ஏவுகணைகளை ஏவி ரஷியா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.…

நிபா வைரஸ் ; வரும்முன் காப்பதே சிறந்தது; ஆசிய விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் 

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவின் சில நாடுகளில் விமான நிலையங்களில் கடுமையான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, தாய்லாந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூர், நேபாளம்,…

கிரீன் கார்ட் இருந்தாலும் வெளிநாட்டவர்களுக்கு இனி இது கிடையாது; பதற விடும் ட்ரம்பின்…

அமெரிக்காவில் வரும் மார்ச் 1 முதல் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு (Green Card holders) வணிக கடன்கள் கிடையாது என அமெரிக்க சிறுதொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்பின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" பொருளாதாரக் கொள்கையின் ஒரு…

மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (3) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு

17 வயது யுவதிக்கு எமனான அயல்வீட்டு இளைஞன்; வீடு திரும்புகையில் காத்திருந்த அதிர்ச்சி

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் 17 வயது யுவதி ஒருவர், அயல் வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி மேலதிக வகுப்புக்குச் சென்று விட்டு குறித்த யுவதி வீடு…

ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு ; இரண்டு வாரங்களில் 30 பேர் பலி

ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு பனிப் பொழிந்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 30 பேர் பலியாகி உள்ளனர். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. இதில் ஆமோரி, நிகாட்டா,…

76 வயதான மூதாட்டி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

திரிவனகெட்டிய தோட்டத்திலுள்ள லயன் அறைக்குள் 76 வயதான மூதாட்டியொருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டியின் மரணம், அவரது மண்டை ஓடு மற்றும் மூளையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் ஏற்பட்டதாக களுத்துறை நாகொட போதனா

ஒரு புறம் அமெரிக்கா ; மறுபுறம் ஈரானில் அரங்கேறும் சோகம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வணிக சந்தையொன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள்…

கிளிநொச்சி போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண்; ஓடிவந்து உதவிய பொலிஸார்

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது…

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியன்மாரில் நேற்று (03) 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நில அதிர்வானது பூமியின் உட்புறத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. மியன்மாரில் ஏற்பட்ட இந்த நில…

சாதாரண தரப் பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், இந்த மாதம் 10ஆம் திகதிக்கு முன் மேற்கொள்ளுமாறு அறிவிக்கபப்ட்டுள்ளது. தனியார்…

மீண்டும் நாட்டில் கொட்டப்போகும் மழை!

இலங்கையின் தெற்கு, பகுதியில் வங்காள விரிகுடாவில் மேற்கு நோக்கி நகரும் அயன சமுத்திர வளித்திணிவுடன் கூடிய காற்றுச் சுழற்சியின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் தற்போது பலத்த மழை பதிவாகி வருகிறது. இன்றும்…

குற்றமற்றவர் ; மலேசியாவில் மரண தண்டனையில் இருந்து தப்பிய பிரான்ஸ் இளைஞன்!

மலேசியச் சிறையில் வாடிய பிரெஞ்சுக்காரர் மரண தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவில் போதைப் பொருள் வழக்கில் சிக்கி, மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த பிரெஞ்சு நாட்டைச்

சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் உருவாக்கிய நபர்

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கம் உருவாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சிம் கார்டுகளில் இருந்து தங்கம் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோ நகரை சேர்ந்தவர் கியோவோ. பழைய கழிவு பொருட்களை சுத்திகரித்து…

வடமாகாண சபையின் சுதந்திர தினம்

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.  வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட…

இஸ்ரேல் ஜனாதிபதி வருகையால் ஆஸியில் போராட்டங்கள் தடை

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சக்கின் அவுஸ்திரேலிய வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கு போராட்டங்கள்மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிட்னி, போண்டி…

GovPay செயலி ஊடாக 46,635 சாரதிகள் அபராதம்!

நடப்பாண்டில் GovPay செயலி ஊடாக 46,635 சாரதிகள் போக்குவரத்து அபராதங்களை செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை மாத்திரம் 11,715 சாரதிகள் இந்த செயலியைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த…

ஆசிரியர் திட்டியதால் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த மாணவன் ; இலங்கையில் பகீர் சம்பவம்

பாணந்துறையிலுள்ள பிரபல தனியார் பாடசாலையில் ஆசிரியர் கண்டித்ததன் காரணமாக மனமுடைந்த மாணவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மாணவன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக…

பட்டதாரி ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு; வர்த்தமானி வெளியீடு

இலங்கையின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு…

தனது குடும்பத்தை காப்பாற்ற 4 கி.மீ தூரம் நீந்தி வந்த 13 வயது சிறுவன்

அஸ்திரேலியாவில் , 13 வயது சிறுவன் ஒருவன் சீற்றமான அலைகளுக்கு மத்தியில் 4 கி.மீ தூரம் நீந்தி வந்து உயிர்களைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேற்கு அவுஸ்திரேலியாவின் ஜியோகிராஃப்…

எச்.ஐ.வி; AI ஆலோசனையை கேட்டவர் ஆபத்தில்

இந்தியாவின் டெல்லியைச் சேர்ந்த 45 வயதான ஒருவருக்கு மருத்துவ பரிசோதனையில் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக, அவர் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டின் ஆலோசனையை நம்பி…

30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யும் Oracle ! அதிர்ச்சியில் ஊழியர்கள்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சுமார் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு…