மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்கு புதிய வீடுகள் – பதில் ஜனாதிபதி!!

மே 9 வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளை மீள நிர்மாணித்து தருவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைப்பை எடுத்து உரையாற்றி வரும் ரணில், மேற்கண்டவாறு உறுதியளித்து வருகிறார்.
தனது ஆட்சியின் கீழ் வன்முறை சம்பவங்களுக்கு இடமில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தாக்கியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரணில் உறுதியளித்து வருகிறார் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் அதிகாரிகளிடம் ரணில் கோரியுள்ளார்.