“நாங்கள் இலங்கைக்கு வந்ததே இந்தக் காரணத்திற்கு தான்..!” உண்மையை போட்டுடைத்த சீன உளவு கப்பல் கேப்டன்!! (படங்கள்)
சீன உளவு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பாக அக்கப்பலின் தலைமை கேப்டன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5-இன் இலங்கை பயணத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு காட்டியது. இந்தச் சீன கப்பலுக்கு முதலில் இலங்கை எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பின்னர் அனுமதி அளித்தது.
அதன்படி செவ்வாய்க்கிழமை இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
சீன கப்பல்
இந்தக் கப்பல் முதலில் ஆகஸ்ட் 11ஆம் தேதி இலங்கை வர இருந்தது, இருப்பினும் இந்தியாவின் அதிருப்தி காரணமாக இது சற்று தாமதமானது. அங்குள்ள நிலைமையை இந்தியா தொடர்ந்து உற்று நோக்கி வருகிறது. இந்தச் சூழலில் ‘யுவான் வாங் 5’ கப்பல் அமைதி மற்றும் நட்பின் அடிப்படையிலேயே இலங்கை வந்துள்ளதாகவும் இது இரு தரப்பிற்கும் இடையேயான உறவுகளை ஆழப்படுத்தும் என்றும் அந்தச் சர்ச்சைக்குரிய கப்பலின் கேப்டன் தெரிவித்து உள்ளார்.
அதிருப்தி
சீனாவின் இந்த உளவு கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதனாலேயே இந்தியா இந்தக் கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து. இருப்பினும், எவ்வித ஆராய்ச்சியும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனை உடனேயே இந்தக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்தது. இந்நிலையில், கப்பலின் கேப்டன் சாங் ஹொங்வாங் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
எதற்காக
இது தொடர்பாகச் சீன உளவு கப்பலின் கேப்டன் சாங் ஹொங்வாங் கூறுகையில், “அமைதி மற்றும் நட்பின் அடிப்படையில் வந்துள்ளோம்.. பல்வேறு வெளிநாட்டுக் கப்பல்கள் வந்து செல்லும் இந்த அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் எங்களுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் சரக்கை நிரப்பவே வந்துள்ளோம். இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும். நட்பின் அடிப்படையில் நட்பின் அடிப்படையில் விண்வெளி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை இது ஊக்குவிக்கும். விண்வெளி மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் இந்த பயணம் முக்கிய பங்கு வகிக்கும்” என்று அவர் தெரிவித்தார். வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்தக் கப்பல் இலங்கையில் இருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா
உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை அரசு சீனாவிடம் இருந்து ஏகப்பட்ட கடன்களைப் பெற்று இருந்தது. இருப்பினும், அதனை இலங்கையால் திரும்பச் செலுத்த முடியவில்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்தச் சீனா கொடுத்த கடனையும் திரும்பச் செலுத்த முடியாமல் போன நிலையில், துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்குச் சீனாவுக்குச் சென்றது. இந்த துறைமுகத்திற்குச் சீன கப்பல் வருவதாக இருந்தது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகம் என்பதால் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதும் கடினம் எனக் கூறப்படுகிறது.