எதிர்க்கட்சித் தலைவரின் முக்கிய சந்திப்பு !!

ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், இலங்கைக்கான யுனிசெப் நிறுவனத்தின் வதிவிட இணைப்பாளர் ஏம்மா பிரிகாம் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக சிறுவர்கள் தலைமுறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இலங்கையை கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.