கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.
இதற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பு தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.